இரா. கீர்த்தி கவிதைகள் மூன்று
1.
காய்கறிகள் வாங்க
கையில் கூடையோடு
போகிறேன்
கோட்-சூட்டுடன் தோள்பேக் மாட்டி
நிழற்குடையில் நிற்கிறவன்
புருவங்களை வளைத்து
௮லட்சியமாய் பார்க்க
வேறென்ன காரணம் தேவைப்படும்?
நான் ௮வள் ௭ன்பதை தவிர….
2.
மொட்டை மரங்களில்
வந்தமரும்
பறவைகளின் சிறகசைவுகளில்
மறந்து போகிறது
இலையுதிர்காலம்
3. மூன்று தெரு சந்திக்குமிடத்தில்
முற்றிப்போனது கலவரம்
நீ ௨யர்ந்தவனா?
நான் ௨யர்ந்தவனா?
கூடியிருப்பவர்கள்
வேடிக்கை பார்க்க,
குருதி வழிந்தோடுகையில்,
ஆவேசமாக வந்த நாயொன்று,
நுகர்ந்ததும்
முகஞ்சுழித்தோடியது,
இருசாதி இரத்தத்தையும் பார்த்து.

Leave a comment