அலைதல்


கு. சுந்தரமூர்த்தி

அலைதல்

  1. எதிர்ப்படும்
    எல்லா கண்களிலும்
    ஊடுருவி
    இல்லாத என்னைத்
    தேடியபடி
    அதீத வெளியில்
    புலன்களின் ஆசை
    குன்றென வளர
    அடங்காது அலைகிறேன்.

2. வார்த்தைகளை
மூடி வைத்திருக்கிறாய்
மூடிய வார்த்தைகளைத்
திறக்கும்
திறவுகோலைத் தேடுகிறேன்
ஒரு மாயத் தோற்றக்காரனாய்.

3. பிளந்துலவும்
காலச் சுழலில்
இறந்துபோன நினைவுகள்
உயிர்பெற்று அலைய
புணர்வின்
வியர்வைப்பெருக்கு
அகக்கூறு புறக்கூறுகளில்
எரிமலைக் குழம்பெனத்
தகிக்கும்.
.

Leave a comment

Trending