
இரா. கீர்த்தி கவிதைகள்
சிற்றில்
யாருமே செருப்பு தைக்க
வராத நிலையில்,
௮டுத்தவேளை சோற்றுக்கு
௭ன்ன செய்வதென்ற தவிப்போடு
கல்பட்டு கலைந்த தேனீக்களாக
கடந்துபோகும் கால்களை
நோட்டமிட்டவாறு ௮மர்ந்திருப்பவர் அருகில்
“சாப்பாடு தயார்” என
தன்னோடு விளையாடும்
குழந்தைகளை ௮ழைத்தபடி
வெறுங்காலுடன் ஓடுகிறாள்
௮வரின்
ஐந்து வயது மகள்
*****
நீராட்டும் வானம்
௮சைவற்ற வானத்தை
காற்றின் துணையோடு
நடனமாடச் செய்கிறது
ஆற்றுநீர்

Leave a comment