
நேஹா காவசேரி கவிதைகள்
மலையாளத்திலிருந்து தமிழில் : இ.ஜானகிப்பிரியா
நிழல்
வெயிலில் நடந்து
கண்ணு மங்கியபோது
வெறுமையான வெள்ளைத்தாளில்
நிறைய மரங்கள் வரைந்தேன்
ஆசையின்
கொப்பும் கிளையுமில்லாத
நிறைய மரங்கள்
****
விதை
சொந்தமென்று சொல்வதற்கு
துளியளவு இடம்.
என்னை வீழ்த்தாமல்
காக்கின்ற மண்.
தொலைவில் நிற்கின்ற கடலை
நான் பார்க்கணும்
எந்தளவு பெரியனவோ அந்தளவு
வலிமையானவையாகவும்
என்னுடைய வேர்கள்.
வசந்தத்தின் விடியலுக்காக
நான்
மழைக்கூட்டத்தை
அழைத்து வருவேன்
***
(காவல் (கவிதைகள்) – மலையாளம், சம்பரத்தி புக்ஸ், குழல்மன்னம், பாலக்காடு, பதிப்பு 2018 )
*இக்கவிதை எழுதும்போது இவர் பதினொன்றாம் வகுப்பு மாணவர். தற்போது விமானப் பணியாளராகப் பணியாற்றுகிறார்.

Leave a comment