அதிசயம் : மெல்லிசைப்பாடல்

பெரியார் விஜயன்

பல்லவி

கண்ணுக்குள்ள என்ன வெச்ச
நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சேன்
பஞ்சுக்குள்ள தீயப் போல பத்திக்கிருச்சி
காந்தத்தில காந்தம் போல ஒட்டிக்கிருச்சி

சரணம்

சுயநலம் பாக்காம
பொது நலம் பாத்தவ நீ
பொறாமை கொள்ளாம
பொறுமை காத்தவ நீ

தங்கத்த ஒரசிப்பாக்கும் கல்லு நீயம்மா
தரத்தில் உயர்ந்த நல்ல நெல்லு நீயம்மா
பூமி சுத்தாம இருண்டே போனாலும் நீ
வார்த்த சொல்லாம வாழ்க்கை வெல்லாது

(கண்ணுக்குள்ளே ……..)

மருந்துகள் இல்லாமலே
மருத்துவம் செய்பவ(ள்) நீ
விருந்துகள் செய்யாம
வருத்தம் கொள்பவள் நீ
பண்புகளப் பதிவு செய்யும் செல்லு நீயம்மா
அன்பாலே திடப்படுத்தும் எள்ளு நீயம்மா.
மானம் இல்லாம மழையிங்கு பெய்யாது
தானம் செய்யாம வறுமைக்கு விடிவேது

(கண்ணுக்குள்ளே ……..)

Leave a comment

Trending