1. தூக்கத்தின்
    ஏதோ ஒரு அடுக்கில்
    என் கனவில்
    மழை பெய்கிறது

என்னருகில்
உறங்கிக் கொண்டிருக்கும்
நீயும் இப்போது
என் கனவுக்குள் வருகிறாய்
நனைந்து கொண்டே

  1. மழையில் நனைந்த வெயிலில்
    நான் காய்ந்து கொண்டிருக்கிறேன்
    வெயிலில் காய்ந்த
    மழையில்
    நீ நடந்து கொண்டிருக்கிறாய்.

நம் கண்கள்
சந்தித்த தருணத்தில்
சாரல் விழ,
ஒரு கவிதை
மெதுவாய்
நனையத் தொடங்குகிறது

  1. மழையைஎதிர்பார்க்கும்
    தருணங்களில்
    சேற்றை
    வாரி இறைத்து விட்டு
    சிரித்துக் கொண்டு போகிறது
    மாலை மழை

4. “மழை வரல
கவிதை எழுத முடியாது”
என்று கன்னம் கிள்ளி சொல்லிப் போகிறது
காலை வெயில்.

Leave a comment

Trending