இரா. கீர்த்தி கவிதைகள்

1) ஆண்களின் கவனத்திற்கு

உடலெங்கும்
நகங்களால் கீறி
உதட்டைத் துண்டாக்கி
முதுகெலும்பு முறியப் புணர்ந்து
கத்தியால் கழுத்தறுத்து சிதைக்கப்பட்டவள்

நகக்கண் சதை அறுபடாமல்
நகம் வெட்டிவிடும்
பெற்றோரின்
ஒற்றை மகளாக
இருக்கலாம்.

2) சுவடுகளேயில்லாமல்
கடந்து போகின்றது
வருடந்தோறும் ௮ம்மாவின் பிறந்தநாள்

Leave a comment

Trending