மூவர்க்குப் பரிசு தலா ரூ.100.
இம்மாதப் போட்டிக்கான பரிசினை வழங்குபவர்
முனைவர் கு.சுந்தரமூர்த்தி.

கீழே தரப்பட்டுள்ள கட்டத்தை
அச்செடுத்து/வரைந்து வைத்துக் கொள்ளவும்.
அதற்கும் கீழே தரப்பட்டுள்ள
இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்
குறிப்புகளைக் கொண்டு சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து கட்டங்களில் நிரப்பவும்.
சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது.

எல்லாச் சொற்களும் எழுதப்பட்ட கட்டத்தைப் படமெடுத்து பொற்றாமரையின் மின்னஞ்சல் முகவரிக்கு (potraamarai2024@gmail.com) அனுப்பவும். இறுதி நாள் 14.06.2024.

சரியான விடை அனுப்புவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ 100 பரிசாகத் தரப்படும்.

கூகுள் படிவம் வழியும் விடைகளை அனுப்பலாம். படிவத்திற்கு இதன் மேல் சொடுக்குக

இடமிருந்து வலம்

1. தரிசு நிலமன்று. பயிரிடக்கூடியது. (5)

3. மிதித்தாலும் அடித்தாலும் வாசலில் கிடக்கும் தூசியைத் தடுக்கும் (4)

5. காதல் தேவதை காமன் தாரம் (2)

7. நெஞ்சையள்ளும் மணியாரம் (8)

9. தமிழ் உலகம் காண் தமிங்கில மதுக்கூடம் (2)

10. ஓரெழுத்துத் திங்களுக்கடுத்த ஈரெழுத்துத் திங்கள் (2)

12. மலையாளப் பவளம் தமிழெழுத்துகளில் (4)

14. எல்லிஸ் கால்டுவெல் தமிழ் தமிழ்க்குடும்பம் (5)

15. கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துச்சாப்பிடு அணிலே ஆடே (2)

16. மெய்யற்ற கையாய்க் குளம் (3)

17. கீரையை ____ கலைகள் அறுபத்து நான்கு (2)

18. மரத்துக்கு மரம் தாவும் மனம் (4)

19. முடிவல்ல (5)

வலமிருந்து இடம்

6. தேர்தல் நேரம் வியங்கோள் ஒழிக்கும் வினையில்லை (3)

மேலிருந்து கீழ்

1. நல்வாக்கு குறிச்சொல் சங்கத்தமிழ் (4)

2. வேம்பின் கனிக்கும் எலுமிச்சங்கனிக்கும் ஒரே பெயர் (7)

4. எட்டுத்திக்கும் கடைநாலெழுத்தில் ஓரெழுத்து மாறின் இளங்களிறு (4)

8. ஐப்பசிக்கும் மார்கழிக்கும் இடையில் திருவின்றிக் குழம்பிய திகைத்திருகார் (5)

11 பழைய நிதியமைச்சர் பேர் ஊர் (6)

13. தமிழ் நாட்டிய நன்னூல் மனக்கருத்தைக் காட்டும் உடற்செய்கை (5)

15. பாலக்காடு கோவை சேலம் ஈரோடு தேன் (3)

16. வெண்ணிறத் தலைச்சுண்டு அரிக்கும் சிறியது (3)

17. மனதோ வயிறோ நிறைய (2)  

கீழிருந்து மேல்

6. வாய்மூடாது அலப்புவது ஆணாயிருந்தால் என்ன பெண்ணாயிருந்தால் என்ன ______ தான் (3)

9. மூன்றரைநாள் நிலக்கிழார்க்குப் பாதி குத்தகைதாரர்க்குப் பாதி (5)

கூகுள் படிவம் வழியும் விடைகளை அனுப்பலாம். படிவத்திற்கு இதன் மேல் சொடுக்குக

Leave a comment

Trending