இது மட்டுமல்ல
முனைவர் இரா, இளவரசன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
அரசுக்கலைக்கல்லூரி, பென்னாகரம்

மின்சாரம் கம்பிகளில் மட்டுமல்ல
கண்களிலும் பாய்கின்றது
கொசுத்தேன் நாக்கினில் மட்டுமல்ல
காதுகளிலும் சிந்துகின்றது.
மண்ணாங்கட்டிகள் உழவின்போது மட்டுமல்ல
மழையின்போதும் மணக்கின்றன.
மின்மினிகள் வாலில் மட்டுமல்ல
நாக்கிலும் ஒளிர்கின்றன.
கரப்பான்பூச்சிகள் அசுத்தங்களை மட்டுமல்ல
மெய்களையும் உண்கின்றன.

Leave a comment