யாழன்
கீதா கபிலன்

நம் வீட்டுத் தோட்டத்தில்
பூக்கின்ற
ரோஜாக்கள் எல்லாம்
ஏனோ தெரியவில்லை
உன் முகம் போலவே
புன்னகை பூக்கிறது….
உன் முகம் வாட
பிடிக்காத நான்தான்
அப் பூக்களுக்கு
குடை பிடித்துக் கொண்டிருக்கிறேன்…
அவற்றைப்
பறித்து எடுக்கவோ
மாலையாகக் கோர்க்கவோ
தெய்வத்திற்குச் சூட்டவோ
எனக்கு விருப்பமில்லை
யாழா…
பக்கத்தில்
போய் நின்றால்
பார்த்துச் சிரிக்கிறது
யாழா…
என் விழி இரண்டில்
ஏதேதோ
காட்சிப்படுத்தி
உன் சாயல்களை
என் பாதைகளில்
பதித்து வைக்கிறது யாழா…
மென்மையான உன்னிடம்
வன்மையாக
பேசவும் இயலவில்லை..
வார்த்தைகளும் எழவில்லை…
சற்றென்று கோபப்படும்
உன்னைப் போல்
அப் பூக்கள் இல்லை..
என்னைக் காணும் போதெல்லாம்
சிரித்து கதை பேசுகின்றன…
நானும் கொஞ்சம் சிரித்து வைக்கிறேன்…
நீங்காத உன்
அன்பின்
சிறு துளியில்
நனைந்து
பறக்கிறது மனது…
ஒரு காத்தாடியாய்..

Leave a comment