விதை 27ஆம் நடவு – மணிச்சிரல்
அகமது கனி
➢ பாலக்காடு இலக்கியச் சோலையின் விதை – நடவு-27 கடந்த 01.06.2024 சனிக்கிழமையன்று தத்தமங்கலம் கவின்மணிச்சுடர் கூடத்தில் நடந்தேறியது.
➢ நடவு, காலை 10 மணிக்கு அகமது கனி தலைமையில் தொடங்கியது.
➢ சிறப்பு விருந்தினராக “மணிச்சிரல்” ஹைக்கூ தொகுப்பு நூலாசிரியர் கோ. லீலா வருகை தந்திருந்தார்.
➢ சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர்கள் இரா. பூபாலன் மற்றும் சுடர்விழி வந்திருந்தனர்.

➢ ”யான் பெற்ற இன்பம்” தலைப்பில்………………
இரவீந்திர ஸ்டாலின், பாவனா சு., இ.ஜானகிப்ரியா, கமலபாலா, பீட்டர் பால், ரஞ்சினி, கன்னல் இளம்பரிதி, திவ்யா, அகமது கனி ஆகியோர் தாங்கள் படித்த கதைகள்-கவிதைகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள்-குறும்படங்கள் குறித்த தம் அனுபவங்களை – எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அகமது கனி கோ.லீலா எழுதிய மறைநீர் நூல் குறித்து பகிர்ந்துகொண்டார். இது பனுவல் நயத்துக்கான முன்னோட்டம் போல் அமைந்திருந்தது.
➢ “பனுவல் நயம்” தலைப்பில் “மணிச்சிரல்” ஹைக்கூ தொகுப்பு …….
இவ் அமர்வில், இரவீந்திர ஸ்டாலின், பாவனா சு., இ. ஜானகிப்ரியா, கமலபாலா, பீட்டர் பால், ரஞ்சனி, கன்னல் இளம்பரிதி, திவ்யா, அகமது கனி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வுக்கு வர இயலாத இரா. கீர்த்தியின் உரை வாசிக்கப்பட்டது.
➢ கவிஞர் இரா.பூபாலன் ஹைக்கூ கவிதைகளின் பரிமாணங்கள் குறித்தும், கவிஞர் சுடர்விழி தம் கவிதானுபவம் குறித்தும் பகிர்நதுரை வழங்கினர்.
➢ இந்த அமர்வில் மேலே குறிப்பிடப்பட்டோர் தவிர குட்டேட்டன் நினைவு நூலகத்தின் பொறுப்பாளரும் வணிகவியல் பேராசிரியருமான திரு. சசிகுமார், சித்தூர்க்கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள் விக்னேஷ், கார்த்திகேயன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
➢ முடிவில், கவிஞர் கோ.லீலா விரிவான ஏற்புரை நிகழ்த்தினர்.

➢ பாவனா சு. தலைமையில் நிகழ்ந்த “கவிப்பட்டறை”யில் போட்டியாளர் கவிதைகள் வாசித்தனர்.
➢ நிறைவாக, சிறப்பு விருந்தினர்கள், கவிப்பட்டறை வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

➢ சிறுவிருந்தருந்தலின் பின் இரவீந்திர ஸ்டாலின் நன்றி நவில இவ் “விதை” நடவு இனிது நிறைவுற்றது.

அமர்ந்திருப்போர் ; சசிக்குமார், இரா.பூபாலன், சுடர்விழி, ஜானகிபிரியா, கோ.லீலா, கவிதா மணாளன், அகமது கனி, கமலபாலா
நிற்போர் : லாவண்யா, திவ்யா, சஜிதா, அஞ்சலி, ரஞ்சினி, பாவனா சு., நந்தகுமார், பீட்டர்பால், ரவீந்திர ஸ்டாலின்

Leave a comment