விதை – 28ஆம் நடவு- சிதிலம் & தாயம்மா
அகமது கனி

➢ பாலக்காடு இலக்கியச் சோலையின் விதை – 28ஆம் நடவு கடந்த 30.6.2024 ஞாயிறு அன்று தத்தமங்கலம் கவின்மணிச்சுடர் இல்லத்தில் – தமிழ், மலையாளம் என இருமொழி நிகழ்வாக இனிது நடந்தேறியது.
➢ நடவு, காலை 10 மணிக்கு கல்வியியல் மாணவர் இரா.கீர்த்தி தலைமையில் தொடங்கியது.
➢ சிறப்பு விருந்தினர்களாக “தாயம்மா” தமிழ் சிறுகதைத் தொகுப்பு நூலாசிரியர் கே.எம்.சண்முகம் “சிதிலம்” மலையாள கவிதைத் தொகுப்பு நூலாசிரியர் பாலு புளிநெல்லி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
➢ சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர்கள் இரா.பூபாலன் சோலை மாயவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
➢ இரா.கீர்த்தி விருந்தினர்களையும் பிற பங்கேற்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
➢ ”யான் பெற்ற இன்பம்” தலைப்பில்………………
இ. ஜானகிப்ரியா, இரா. கீர்த்தி, கார்த்திகேயன், ஸ்டாலின், இரா.பூபாலன், சுடர்விழி, கமலபாலா, கே.எம்சண்முகம், சுஜானா அசீஸ், அகமது கனி ஆகியோர் தாங்கள் படித்த கதைகள்-கவிதைகள் பார்த்த திரைப்படங்கள்-குறும்படங்கள் குறித்த தம் அனுபவங்களை – எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர்.
➢ தமிழ்: ”பனுவல் நயம்” தலைப்பில் “தாயம்மா” சிறுகதைத் தொகுப்பு …….
இவ் அமர்வில், இரா.கீர்த்தி, இரா.பூபாலன், ஜானகிப்ரியா, சுடர்விழி, அகமது கனி ஆகியோர் பங்கேற்றனர்.
ஒவ்வொருவரும் அந்நூலைத் தமக்குரிய விதத்தில் உள்வாங்கி, அது விவரித்த காட்சிகள், உரையாடல்கள், சமூக அவலங்கள் மட்டுமின்றி, அக்கதைகள் சமூகத்திற்கு சொல்லும் செய்திகள் — என நயந்தும் பகுத்தும் உரை வழங்கினர்.
➢ மலையாளம்: “பனுவல் நயம்” தலைப்பில் “சிதிலம்” கவிதைத் தொகுப்பு…
இவ் அமர்வில், ஸ்டாலின், சிவதாசன் மடத்தில், கமலபாலா, ரஞ்சினி, சுஜானா அசீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
பங்கேற்க இயலாத சீமா ராஜ் சங்கரின் உரை வாசிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் இக்கவிதை நூலில் தாம் துய்த்த அனுபவங்களையும் நயங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
➢ முடிவில், எழுத்தாளர்கள் கே.எம்.சண்முகம் பாலு புளிநெல்லி ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.
➢ “கவிப்பட்டறை”யில் போட்டியாளர்கள் – நந்தினி, ரஞ்சினி, கீர்த்தி, நந்தகுமார், சுடர்விழி – கவிதைகள் வாசித்தனர்.
➢ நிறைவாக, சிறப்பு விருந்தினர்களுக்கும் கவிப்பட்டறை வெற்றியாளர்களுக்கும் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
➢ “யான் பெற்ற இன்பம்” நிகழ்வை கார்த்திகேயனும், “பனுவல் நயம்” நிகழ்வை நந்தகுமாரும், “கவிப்பட்டறை” நிகழ்வை கன்னல் இளம்பரிதியும் சிறப்புறத் தொகுத்து வழங்கினர்.
➢ இந்த நடவு நிகழ்வில் மேலே குறிப்பிடப்பட்டோர் தவிர மாணவர்கள் பிரியங்கா, லாவண்யா, சங்கீதா, மலையாளப் புதின ஆசிரியரும் சுப்ரபாதம் இதழ் செய்தியாளருமான சண்முகதாஸ், மலையாளக் கவிஞர் பிரேமதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
➢ கவிஞர் சோலை மாயவன், விழா நிகழ்வுகளின் காணொலிப் படப்பதிவைப் பரிவுடன் செய்துதவினார்.
➢ கவிதா மணாளன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த இவ் “விதை” நடவு, சிறுவிருந்தருந்தியபின் அகமது கனி நன்றி நவில இனிது நிறைவுற்றது.

(விதை நிகழ்வின் உரைகள் கவிஞர் சோலைமாயவனால் காணொலிப் பதிவு செய்யப்பட்டு அன்றில் காணொலி வாய்க்காலில் காணக்கிடைக்கின்றன
http://www.youtube.com/@Andril2019 )

Leave a comment