விதை – நடவு-29

➢ பாலக்காடு இலக்கியச் சோலையின்  விதை – நடவு-29 கடந்த 20.8.2024 செவ்வாய் அன்று தத்தமங்கலம் கவின்மணிச்சுடர் இல்லத்தில் நடந்தேறியது.

➢ நடவு, காலை 10 மணிக்கு  பாவனா சு. தலைமையில் தொடங்கியது.

➢ சிறப்பு விருந்தினராக “ஆகுளி” கவிதைத் தொகுப்பு நூலாசிரியர் – நடன ஆசிரியர் கீதாபிரகாஷ் வருகை தந்திருந்தார்.

➢ நிகழ்வில் முதலாவதாக, பாவனா சு. விருந்தினர்களையும் பிற பங்கேற்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.

➢ பின்னர் ”யான் பெற்ற இன்பம்” தலைப்பில்………………

கவிதா மணாளன், கமலபாலா, ஜானகிப்ரியா, இரா.சித்ரா, இரா.கீர்த்தி, பீட்டர் பால், பாவனா ப., பாவனா சு, அகமது கனி ஆகியோர் தாங்கள் படித்த கதைகள்-கவிதைகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள்-குறும்படங்கள் குறித்த தம் அனுபவங்களை – எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர்.

➢அடுத்து, “பனுவல் நயம்” தலைப்பில் “ஆகுளி” கவிதைத் தொகுப்பு …….

இவ் அமர்வில், பீட்டர் பால், இரா.சித்ரா, இரா.கீர்த்தி, கமலபாலா, பாவனா சு., ஜானகிப்ரியா, பாவனா ப., அகமது கனி ஆகியோர் பங்கேற்று ஆகுளி குறித்த தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு நேரில் வர இயலாத ஜோதிலட்சுமி ஆகுளி குறித்து எழுதி அனுப்பியிருந்த உரை அரங்கில் வாசிக்கப்பட்டது.

➢ முடிவில், கவிஞர் கீதா பிரகாஷ் – தம்மைப் பயிற்றிய அன்பாசிரியர் புலவர் செந்தலை கவுதமனின் பண்புநலன்கள் தொடங்கித் தாம் கவிஞராக பரிணமித்ததற்கு பின்புலமாக நின்று ஊக்கிய ஆளுமைகள் வரை நினைவுகூர்ந்தார். மேலும், பனுவல் நயத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி விரிவான ஏற்புரை நிகழ்த்தினார்.

➢ பாவனா சு. தலைமையில் நிகழ்ந்த “கவிப்பட்டறை”யில் போட்டியாளர்கள் இரா.சித்ரா, இரா.கீர்த்தி, பாவனா சு., கீதா கபிலன், பீட்டர் பால் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

➢ நிறைவாக, சிறப்பு விருந்தினர்கள், கவிப்பட்டறை வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

➢ இந்த விதை-நடவில் மேலே குறிப்பிடப்பட்டோர் தவிர ஆசிரியர். வை.தர்மலிங்கம், திருமதி.கமலபாலா, திரு.(கீதா)பிரகாஷ் மற்றும் மாணவர்கள் கன்னல் இளம்பரிதி, சித்ரா தேவி, சங்கீதா, சஜிதா, பிரியங்கா, லாவண்யா, அஸ்வதி ஆகியோரும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.

➢ கவிதா மணாளன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ் “விதை”நிகழ்வு, சிற்றுணாவுக்குப் பின் திரு. கமலபாலா நன்றி நவில இனிது நிறைவுற்றது

Leave a comment

Trending