முப்பரிமாணம் 1 : நூல்வழிப்பயணம் 5

ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம்,
காலாதிகாலத்தீட்டு,
வண்டிக்காரன்

அன்பாதவன்


“நவீனத்துவம் என்பதும் நவீனமயமாதல் என்பதும் வேறு வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேலைச் சூழலில் எதார்த்தவாதத்திற்குப் பின் தோன்றிய ஓர் இலக்கியக் கோட்பாட்டை நவீனத்துவம் என்பர். நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கியப் போக்கைக் குறிப்பதென்றால் நவீனமயமாதல் என்பது பொதுவாக மொழியானது என்பார் அ. மார்க்ஸ்.
தமிழின் பாடுபொருள்கள் மாறின. வடிவம் புதிதானது. உரைநடையிலிருந்து சற்றே விலகி உள்ளடக்கத்தால் புதிய உத்திகளோடு கவிதைகள் உருவாயின. மொழி புதுப்பிக்கப்பட்டது. தமிழின் நவீன கவிதை/கதை“நவீனத்துவம் என்பதும் நவீனமயமாதல் என்பதும் வேறு வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேலைச் சூழலில் எதார்த்தவாதத்திற்குப் பின் தோன்றிய ஓர் இலக்கியக் கோட்பாட்டை நவீனத்துவம் என்பர். நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கியப் போக்கைக் குறிப்பதென்றால் நவீனமயமாதல் என்பது பொதுவாக மொழியானது என்பார் அ. மார்க்ஸ்.

தமிழின் பாடுபொருள்கள் மாறின. வடிவம் புதிதானது. உரைநடையிலிருந்து சற்றே விலகி உள்ளடக்கத்தால் புதிய உத்திகளோடு கவிதைகள் உருவாயின. மொழி புதுப்பிக்கப்பட்டது. தமிழின் நவீன கவிதை என ஓர் ராஜபாட்டை உருவாகியது. பிறநாட்டு இசங்களை கடன்வாங்கி தமிழின் நவீனக் கவிதை உருவானதென்று விமர்சனமுண்டு.
என ஓர் ராஜபாட்டை உருவாகியது. பிறநாட்டு இசங்களை கடன்வாங்கி தமிழின் நவீனக் கவிதை உருவானதென்று விமர்சனமுண்டு.

01.”ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்:
இவ்வுலகில் பிறந்த எவருக்கும் வேர்களையும் தம் விழுமியங்களையும் மாற்றிக் கொள்ளச் சம்மதமில்லை, ஆனால் ஈழத்தில் பிறந்து, இலங்கையின் படைகளின் அட்டூழியங்களுக்கு அஞ்சி, ’உயிர்ப் பிழைத்தால் போதுமடா சாமி’ என வாழ்தலின் பொருட்டல்ல… இருத்தலின் (Existence) தேவை கருதி புகலிடம் தேடி, ஐரோப்பா, இந்தியா, ஆஸ்திரேலியா என பல கண்டங்களுக்கும் செல்லத் துணிந்தவர்கள் வாழ்விலே நிகழ்ந்ததென்ன?
”ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்” – எனும் முனைவர் இரா. செங்கொடியின் ஆய்வு நூலை வாசிக்க, உண்மைத் துலங்கும்.
”ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் கறுப்பு ஜீலை என அழைக்கப்படும் ஜீலை 1983 தொடங்கி 2009 – லில் முள்ளி வாய்க்காலில் கொத்துக் கொத்தாக ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதத்தின் பேய்த்தனத்தினால், பிறந்து வளர்ந்த தாய் நாட்டில் வாழ முடியாமல் உயிரைப் பிடித்துக் கொண்டு உலகப் பரப்பு முழுவதும் தஞ்சம் கோரித் தவித்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கைப்பாடுகளும் துக்கங்களும் ஈழத்தமிழரின் எழுத்துகளில் எவ்வாறு ஆவணமாக, வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பனவற்றையெல்லாம் ஒன்றையும் விட்டுவிடக் கூடாது என்கிற கவனத்தோடு தொகுத்தும் பகுத்தும் இந்த நூலில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார் என அணிந்துரையில் குறிப்பிடும் பேரா. க. பஞ்சாங்கத்தின் முன் குறிப்பு, நாலில் நுழைவதற்கு ஏதுவாய், புத்தக கதவைத் திறந்து வைக்கிறது.

போர் அல்லது யுத்தம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன அறியாமலும் புரியாமலும் மன்னர்களின் வாள் முனையின் பெருமை பேசும் புறநானூற்று வழியில் வந்த தமிழ்க்குடிகளுக்கு ஈழ விடுதலைப் போராட்டம், கண்கண்ட சாட்சியாக முன் நின்றது.

ஆயுதங்கள், குண்டு வீச்சு, பாலியல் வன்முறை, படுகொலைகள் போன்ற அவலங்கள் 1980-க்கு பிறகே தமிழ்நாட்டின் திரைக்கதா நாயகர்களின் சாகசத்தில் மயங்கி கிடந்த தமிழ் நாட்டின் பெருங்குடி மக்களுக்கு அறிமுகமாகின்றன.

இலக்கியங்களில் அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு களவொழுக்கமும், கற்பொழுக்கமும் அகமென மகிழ்ந்து, ஆண்ட மன்னர்களின் போர்ப் பெருமையை சிவாகித்து கிடந்த மறத் தமிழர்க் கூட்டத்துக்கு ‘புகலிட இலக்கியம்‘ என்பது புதிது! அயலக வாழ்க்கை, அகதியின் அவலம் புதிது.

22, தலைப்புகளில் ஈழமக்களின் கண்ணீர் மற்றும் செந்நீர் வரலாற்றை, ஒலியற்ற குரலின் பெருவலியை கட்டுரைகளாக தந்திருக்கிறார், முனைவர் செங்கொடி.
எண்பதுகளின் தொடக்கத்தில், இலக்கிய உலகில் நுழையும்போது அதிர்வான வரவேற்பைத் தந்தது ஈழப் போராட்டமும் அது சார்ந்த இலக்கியங்களும் தான்! அதுவரை ‘மஹாகவி‘கள் ’குறும்பா’ எழுதி குதூகலித்துக் கொண்டிருக்க குமரனுக்கும் குந்தவிக்கும் கடிதங்கள் எழுதிய செ. கணேசலிங்கன், செ. யோகநாதன் போன்றோர் புதினங்களாக… சேரன், எம். எ. நுஃமான், வ.ஐ.ச. ஜெயபாலன், வண்ணச் சிறகு சங்கரி, கௌரி போன்றோர் கவிதைகளாகவும், போரை ,,வெகு மக்களின் துயரங்களை,போராட்டவரலாற்றை சொல்லாத சேதிகளாக எழுதினர்.
‘உயிர் பிழைத்தால் போதும்‘ – எனச் சிலப் படைப்பாளிகள் பல தேசங்களுக்கும் பறந்துபோக ‘புகலிட இலக்கியம்‘ எனும் புதுவகை படைப்புகள்அறிமுகமாயின.
அ. முத்துலிங்கம், ஆழியாள், நோயல் நடேசன், நளாயினி தாமரைச் செல்வன்,ஷோபாசக்தி, றஞ்சி, ரவி ,புஸ்பராஜா,–யெனப் புதுப்பட்டாளம் எனில் இஃதோர் புதூ… அனுபவம் ,கசப்பும் துவர்ப்புமான வாழ்வியல் பதிவு!
தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்த வந்த  தமிழர்கள் பிற நாடுகளுக்கு செல்லும் முயற்சிகளினூடாக,  தரைப்பயணம், கடல்பயணம் அனைத்திலும் பல கணக்கற்ற கஷ்டங்களை சந்திப்பதை துயர்மிகு சொற்களால் விவரிக்கிறது ‘பயணநிலை அவலம்‘ அத்தியாயம்.
”போரில் முதலில் பாதிக்கப்படுவதும், இறுதியாக பாதிக்கப்படுவதும் பெண்தான். புலம் பெயர்விலும், ஆண்கள் சந்திக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளும் பெண்கள் கூடுதளாகத் தங்கள் உடல் சார்ந்த உபாதைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.” (ப.27) எனச் செங்கொடி குறிப்பிடுவது பல பெண் படைப்பாளிகளின் எழுத்தில் பதிவாகி இருப்பதென்னவோ நிஜம்.
‘யாதூம் ஊரே யாவரும் கேளிர்‘ தேசத்துக்கு செல்ல அல்லல் படுவதை, ‘அகதி தஞ்சக் கோரிக்கை, குடியுரிமை, கடவுச் சீட்டு சிக்கல்கள்‘ – கட்டுரை விரிவாய் அலசுகிறது. கொடுந்துயரச் சரிதத்தை குறைந்த வரிகளில் சொல்லிட ஏலுமா…?
போரின், விடுதலைப் போராட்டத்தின் காரணங்களினால் தாய்மண் விலகி, உறவு, உடைமை இழந்து இருத்தலுக்கான ஏக்கத்தினால் முழுவதும் அந்நிய நாடுகளுடன் அல்லல்களை ஈழத்தமிழர் நித்தம் சந்திப்பதை ‘வசிப்பிடச் சிக்கல்‘ எனும் கட்டுரை வலி நிறைந்த வரிகளால் விவரிக்கிறது.
சொந்த மண்ணில் வறுமையின் நிழலுமின்றி வாழ்ந்தவர், புகலிடத் தேசத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே சம்பாதிப்பது,அதன் பகுதியை ஈழத்தில் இருக்கும் உறவுகளுக்கு அனுப்புவது என்றாகிவிட்டனர் என்பதை ‘புகலிடத் தொழிலாளர் நிலை‘ கட்டுரை துயர்படச் சொல்கிறது.
”1983- இனக் கலவரத்தின் உச்சகட்டமாகச் சொந்த மண்ணிலேயே வாழ முடியாத நிலையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வசதிகளாகப் புலம் பெயர்ந்தனர். வரலாற்று நிர்பந்தத்தால் உலகெங்கும்  புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சென்ற இடமெல்லாம் தங்களுடைய இருப்பினை நிலைநாட்டும் நோக்கில் கலை இலக்கியப் பாரம்பரியத்தை நிலைநாட்டினர் என புகலிடச் சிற்றிதழ் அறிமுகம் (ப.185) கட்டுரையில் பேரா. செங்கொடி குறிப்பிடுவது மாபெரும் வரலாற்றுண்மை.
புலம்பெயர் மக்கள் படைத்த எழுத்துகள் உலகெங்கிலும் பரவிட இலக்கிய வளர்ச்சி ஏற்பட புகலிட தேசங்களில் இருந்து தொடங்கி நடத்தப்பட்ட தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு முக்கியப் பங்கிருப்பதை எவரும் ஏற்பர்.
‘எக்ஸில், தூண்டில், சுவடுகள், காலம், மண், சிந்தனை, பூவரசு, கிளங்காற்று, நிழல், தேடல், கூர், ழகரம், தாயகம், அறிதுயில் அற்றம், மண்வாசம், நுட்பம், நான்பாவது பரிணாமம், அக்கினகுஞ்சு, அசை, பள்ளம், உயிர்நிழல், பாலம், பறை, அம்மா, அஆகி, சக்தி, உயிர்மெய், ஊதா, கண்‘ – போன்ற பல சிற்றிதழ்கள், அச்சிதழ்களாகவும், மின்னிதழ்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து பொன்ற பல நாடுகளில் இருந்த வெளிவந்து சாதனை படைத்ததையும் பேரா. செங்கொடி, விரிவானப் பட்டியலாய் வழங்கி இருப்பது வரலாற்றுப் பதிவு.
”புகலிட நாடுகளிலிருந்து வெளியாகும் அரசியல் தன்மையை இரு நிலைகளில் நோக்க முடியும்.
1.கண்ணை மூடிக்கொண்டு இயக்கங்களைத் துதிபாடுபவை
2.அனைத்தையும் விமர்சனத்திற்குட்படுத்தி, தேடலை நோக்கியவை”
என மு. நாகேந்திரன் அவர்களின் மேற்கோளை, பேரா. செங்கொடி சுட்டுவது கவனிக்கத்தக்கது, விரிவான ஆய்வுக்குரியது. காரணம் ஈழப்போராட்டத்தையும், புகலிட வாழ்வின் விளைவுகளையும் இயக்கங்களின் பங்களிப்பு மற்றும் திசைவழியோடும் செயல்பாடுகளோடும் மட்டுமே அணுகமுடியும்.
தாய் மண்னான ஈழத்தில் எழுத்து, பேச்சு என பெண்ணுக்கு மறுக்கப்பட்டவை யாவும், புகலிடத் தேசங்களில் இருந்து சுதந்திரச் சிந்தனையோடு செயல்பட புலம் பெயர் வாழ்க்கை வாய்ப்பளித்ததை ‘பெண் தனித்துவத்தைக் கட்டமைத்தல்‘ கட்டுரை விரிவாகப் பேசுகிறது.
‘உடலை எழுதுதல்‘ என்னும் ஜீலியா கிறிஸ்தெவா போன்றவர்களின் பெண்ணியத் திறனாய்வுக் கோட்பாடுகளுக்கேற்ப, தாய் தேசம் மறுத்த பேச்சுரிமை, எழுத்துரிமை, மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட உணர்வுகள் யாவும் புலம்பெயர்ச் சூழலில் சுதந்திரமாக பெண் படைப்பாளிகளால் வெளிப்படுத்த முடிந்தது எனக் குறிப்பிடும் பேரா. செங்கொடி, கூடுதலாக ”பெண்ணின் பலவீனமான உடற்கூற்றையும், பெண் சார்ந்த மரபுகளையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு பாலியல் ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும், அவளைச் சுரண்ட முற்படும் ஆதிக்கச் சக்திகளுக்கு அறைகூவல் விடுக்கும் தன்மையையும், அவ்வாறான எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் பெண்ணினத்துக்கு ஊட்ட முற்படும் வீரியமும் உண்மையான பெண்ணிய எழுத்துக்கு உண்டு” என்னும் ஆய்வு வரிகள் ஈழ இலக்கியர் மட்டுமல்ல தமிழ்நாட்டு படைப்பாளிகளுக்கும் பொருந்துபவை.

புலம்பெயர் வாழ்வுத் துயர்மிகுந்தது, கொடியது அதிலும் புகலிடப் பெண்டிர் நிலையோ எழுத்தில் சொல்லவியலா வலி வாழ்வு.
‘புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள்‘ எனும் கட்டுரை பின்வருமாறு பட்டியலிடுகிறது.
புதிய சூழல்
அகதி அடையாளம்
பால் அடையாளம்
ஆணாதிக்கம்
குடும்ப அமைப்பு
பண்பாட்டு மாற்றம்
 மொழிப் பரிமாற்றம்
உணவுச் சிக்கல்
உறவுச் சிக்கல்
சுற்றங்களின் அரவணைப்பின்மை
மணக்கொடை யெனும் வரதட்சணை
தற்கொலைச் சிந்தனை
திருமண வாழ்வின் நெருக்கடி
இறுக்கமானக் குடும்ப அமைப்பு.
எனினும் நூலாசிரியர் குறிப்பிடும் மேற்சொன்னப் பிரச்னைகள் யாவும், புகலிடம் தேடிய ஈழச் சகோதரிகளுக்கு மட்டுமானதல்ல… உலகெங்குமுள்ள பெரும்பாலானப் பெண்களுக்கானவை.
சரி, புலம்பெயர்ந்தோரின் அயலிட வாழ்வு, சற்றேக்குறைய அரை நூற்றாண்டை தொட்டுவிட்டதெனில், அவர்தம் எதிர்காலம் எப்படி இருக்கும்? மிகப் பெருவினா ஒன்றினை எழுப்புகிறார் நூலாசிரியர்.
அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளோடே, மொழி, பண்பாடு போன்ற தம் அடையாளத்தை தக்க வைப்பதற்குப் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடும் பேரா. செங்கொடி என்றாவது ஒரு நாள் ஈழம் மலரும், வசந்தம் வரும், உதிர்ந்த மலர்கள் தோரணமாகும், மலர்ச் செடிகள் புத்துயிர் பெறும், கரைந்த வாழ்வு திரும்ப வரக்கூடும் – என்றெல்லாம் கனவு வார்த்தைகளால் பூசி மெழுகாமல், ‘இத்தகு சூழலில் சிங்கள இராணுவ மேலாதிக்கத்தால் உலகம் முழுதும் அதிகமாகச் சிதறிவாழும் ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின் வாழ்வு எவ்வாறு அமையும் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்” என நெற்றிப் பொட்டில் அடித்த நிதர்சனத்தை பதிவு செய்வது நூலாசிரியரின் நேர்மைக்கு சான்று .
மொழியும், பண்பாடும் உணவு முறைகளும், புகலிட வாழ்வின் பெரும் சிக்கலை ஏற்படுத்துவன. பெற்றோர் – குழந்தைகளிடையே இணக்க உறவுகள் இல்லாததை, கீழ்க்கண்ட அழகுக்கோனின் கவிதை வரிகள் வழியாக…வரிகளால் வாசகரின் மனதில் கடத்தி விடுகிறார் இரா. செங்கொடி, 
“குழந்தைகள் ஊரை உறவை மறந்துவிட்டன
மொழி, ஆங்கிலச் சமுத்திரத்தில் அழிந்துவிட்டது
உறவுகள் பல்லினச் சேர்கையில் கவர்ந்து விட்டன.”
இயற்கையின் பருவமாற்றங்கள், தட்ப வெப்ப மாறுதல், உணவு வகைகள் போன்றவை உடலில் ஏற்படுத்தும் அயர்ச்சி ஒருபுறமெனில், அந்நியமாதல் எனும் மனப்பிரிதல் மற்றொரு புறம், இதன் பக்கவிளைவாக, போதைப் பழக்கம், குற்றங்களில் ஈடுபடுதல், தற்கொலை முயற்சிகள் என (Negative) எதிர்மறைகள் ஒரு தட்டினில் எனில், மறுதட்டிலோ போர் எதிர்ப்பு, தாய்மண் விடுதலை, மொழி காத்தல் என நேர்மறைகள் (Possitive) – அனைத்தையும் காய்தல் உவத்தலின்றி பதிவு செய்திருப்பது முனைவர் செங்கொடி-யின் கல்விப் புல நேர்மை.
புலம்பெயர் வாழ்வில் புகலிட தேசங்களில் ஈழப்பெண்டிர் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளில், பண்பாட்டுக்கலப்பு, மொழிக்கலப்பு என்பவை ஒரு புறமெனில், பாலியல் சமனின்மை, பாலியல் வன்கொடுமை போன்றவைகள் எழுத்தில் சொல்ல முடியாதவை.
தமிழ் மொழியை, மின்மொழியாய் மாற்றி புலம் பெயர்த் தமிழரின், சாதனையெனில், உலகமெல்லாம் தமிழ்ப் பரவிட டிஜிடல் தமிழாய் மாற்றியது பெரும் சாதனையெனலாம்.
ஈழத்தமிழரின் புலம் பெயர் இலக்கியம் – என்கிற இந்நூல் சமகாலத்தை பிரதிபலிப்பது, பதிவு செய்வது. சமகாலத்தை எழுதுதல் என்பது எந்த ஒரு படைப்பாளிக்கும் பெரும் சவால்! அந்த சவாலில் சளைக்காமல் சலிக்காமல் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார் செங்கொடி! பட்டொளி வீசி பறக்கிறது செங்கொடி-யின் ஜெயக்கொடி.
கண்ணீரின்றி வாசிப்பது தான் வாசகருக்கான வாசக சவால்! எதிர்கொள்வீரா…?
@

  1. காலாதிகாலத் தீட்டு – விஜயபாரதி
    “ஒதுக்கி வைத்துவிட்டு
    பொதுக்குளம் என்று பெயர் சூட்டியவர்கள்
    கழுவியும் குளித்தும் முடித்தபின்
    சொம்பில் அள்ளிச் செல்கிறார்கள் தீர்த்தமென்று. [    ப-26]-
    மலக்குழியில் மடியும் மானுடங்களுக்கு,தன் காலாதிகாலத் தீட்டு _கவிதைத் தொகுப்பை சமர்ப்பித்திருக்கும் விஜயபாரதி யார் பக்கம் நின்று எழுதுபவர் என வாசகனுக்குப் புலப்படுகிறது.
             “நீலத்தில் பூத்து 
              சிவந்த கருப்பே
           எங்கள் கிழக்கு” (ப-32)-என்ற வரிகளின் வழியாக கவிஞரின் திசைவழி எதுவென்றும். புரிந்து விடுகிறது
            தன்னைச் சுற்றியுள்ள எங்கிருந்தும் ,எதிலிருந்தும் கவிதைக்கானக் கச்சாப் பொருளை சேகரிக்கும் விஜயபாரதி, இத்தொகுப்பில் கிராமத்து வாழ்க்கையையும் ,சரிசமமாக நகரத்து கோட்டோவியங்களையும் படம் பிடித்திருப்பது வாசகனுக்கு இலகுவான இலக்கியப் பயணம்.
            தொகுப்பில் மையமாய் காணக் கிடைப்பது, தலித் வாழ்வின் மீதான கவிஞரின் அவதானிப்புகள்.
           “மலக்குழிக்குள்ளிருந்து
            எட்டிப் பார்க்கிறான்
         ஒளிர்கிற  டிஜிட்டல் இந்தியாவை”-(ப-68)-மிக வெளிப்படையான வரிகளில் ‘எங்கே கவியழகு?’ எனக் கேட்கும் டிஜிட்டல் இந்தியரும் இருக்கக் கூடும்!
           அணிந்துரையில்,துவாரகா சாமிநாதன் குறிப்பிடுவது போல ,”துக்க காரியங்களுக்கு செல்லும்போது யாரும் சிங்காரித்து செல்வதில்லை.அதுபோலதான் காலாதிகாலமாக இருக்கும் வலிகளை பாடும் கவிதைகளும் ,சீவி சிங்காரித்து, அலங்கரித்து வருவதில்லை “(எழுத்தாளர் கந்தர்வன்)

           சந்திரனுக்கு ராக்கெட் விட்டாயிற்று .இன்னும் பிற கிரகங்களுக்கும் ஏதேதோ ஏற்பாடுகள்,ஆனால் “செப்டிக் டேங்க்” என்னும் மலக்குழியைச் சுத்தம் செய்யும் எந்திர மனிதனை யாரும் கண்டுபிடித்ததாய்த் தெரியவில்லை .இன்னும் எத்தனை காலத்துக்கு மலக்குழி மரணங்கள்?

அடிமை வாழ்வை, அடக்குமுறைகளை உயிருள்ள மனிதர்களாகவே மதிக்காத அதிகார பீடங்களை, மத ஆளுமையை – சட்டையைப் பிடித்து உலுக்கும் வகையாகப் பொங்கி எழுகின்ற தலித்துகள் குரல் எப்படி இருக்க முடியும்?

 “ பிணவறையில் கிடக்கிறது
பிடித்த தலைவனுக்கே வாக்களிப்பதாய் 
சூளுரைத்தவனின் உடல்.
சைரன் ஒலி அணைக்கப்பட்ட ஊர்தியிலிருந்து
வெள்ளைத் துணிக்குள் 
கட்டப்பட்ட பொட்டலமாய்  இறக்கப்படுகிறது சடலம்.
கதறல்களுக்கிடையே
எதற்கென்று அறியாது அழும்
அவன் பிஞ்சு குழந்தையின் ஒலியும்
தோழர்களின் மௌனத்தைக் கலைக்க
இரத்த வகை,அறிவாள் வெட்டின் அளவுகள்,
கத்திக் குத்தின் ஆழம், என
அனைத்தும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது
சாதியைத் தவிர.
கண்களைத் துடைத்தபடி கையெழுத்திடுகிற அவன் மனைவி
சமர்ப்பிக்கிறாள் பிரேத பரிசோதனை அறிக்கையை 
“இப்போல்லாம் யாருங்க சாதி பாக்குறா”- [பக்-21 ] என முடியும் கவிதைக்குள் ஒளிந்திருக்கிறது கடுஞ்சோக சிறுகதையொன்று
.
தலித் இலக்கியங்களிலுள்ள அழகியல் என்பது வெறுமனே காணக்கிட்டும் இன்பச்சூழ்நிலை அல்ல. அது அவலச்சுவை. வலி, வேதனை, அவமானம் ஆகியவற்றைக் கடந்து கட்டியெழுப்பும் கல் கோட்டை ஆகும். அது சாதி எல்லைகளையும் வற்புறுத்தும் மதச்சுவர்களை இடிக்க எண்ணிய அம்பேத்கர் மற்றும் காந்தியடிகளின் கனவு இன்னும் கனவாகவே உள்ளது. சாதி மத பேதமற்ற சமகால சமுதாயம் காண்பதற்கான சீர்திருத்த இயக்கத்திற்கு தலித்துகளின் பிரச்சனைகளை முன்னெடுத்து எழுதுகிற தலித் எழுத்து களுக்கும் வேறுபாடுகள் இல்லை. இரண்டும் ஒன்றுதான். தலித் எழுத்தாளர்கள் கலக எழுத்தாளர்களாக நம் கண்முன் சித்தரிக்கப்பட்டாலும் தலித் இலக்கியங்கள் நாட்டில் எங்கோ அல்லது நம் கண்முன் நடக்கும் அவலத்தின் பிரதிபலிப்பே எனலாம்

         பாட்டன் ,பூட்டன் 
         தாத்தன் ,தகப்பன் என 
         எவர்க்கும் கையெட்டப் 
         பெறாத
         கல்வியைத் தொட
         ””
        இருளைக் கிழிக்கும் 
        ஒளி நெய்ய 
        கொஞ்சம் கொஞ்சமாக 
        சிரித்தபடி தெரிகிறார்
       அம்பேத்கர். -என கற்பி,ஒன்றுசேர்,புரட்சி செய்,எனக் கற்பித்த அண்ணலையும் கவிதா பாத்திரமாக ஆக்கியிருப்பது சிறப்பு.
ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்ட வேதியத்தத்துவமும் காந்திய நடைமுறையும் கைகோத்த போது அதன் ஆவேசமான எதிர்வினையாக எழுந்தது தலித் அரசியல். மொத்த ஆதிக்க நாடுகளுக்கு எதிராக மூன்றாம் உலகப் படைப்புகள்… வெள்ளை வெறியர்களுக்கு எதிரான கறுப்பின மக்களின் எழுச்சி என்று தொடங்கும் இந்த நீண்ட பயணம் இங்கே ‘தலித் இலக்கியமாக தலித் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதாக தலித் அரசியலை முன் வைப்பதாக , இந்தியச் சமூகத்தின் மிக முக்கியமான அம்சமாக, இங்குக் கோலோச்சிக் கொண்டிருக்கும் சாதிய அமைப்புக்கு எதிரான குரல்களாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதே இலக்கிய வரலாறு
     
  வயது 75
       சுதந்திர நாளுக்கு
       பூக்களை உதிர்த்தபடி
       பட்டொளி வீசி 
       பறக்கிறது கொடி
எனக் கம்பீரமான காட்சியொன்றோடு தொடங்கும் கவிதை இப்படியாக முடிகிறது.
     கொளுத்தியது போக
     மிச்சமிருக்கின்றன 
   குடிசைகள்.(பக் -47)-இருவேறு காட்சிகளை இணைiப்பதன் மூலமாக கொலாஜ் உத்தியில் இக்கவிதை நெய்யப்பட்டிருப்பது சிறப்பு . சாதிய அமைப்பின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு, அன்று நிலவியிருந்த நிலைமைகளின் ஒரு பகுதியாகத்தான் சாதி இருந்ததாகக் கருத வேண்டும் என்பதை உணர்ந்த டாக்டர் அம்பேத்கர், “பிரச்சாரம் செய்வதாலேயே சாதிய அமைப்பை உருவாக்கி விடவோ அழித்துவிடவோ இயலாது” என்று குறிப்பிடுகிறார்

         விஜயபாரதியின் கவிதை உத்தி என்பது காட்சிகளை அடுக்கி அதன் மூலம் அழகியல் கவிதைகளையும் ,அரசியல் கவிதைகளாக மாற்றி விடுவதுதான்
“அடிசேற்றில் நெளியும் அசரைகள்
தண்ணீர்த்தண்டுகளின் இடையில் செல்லும் நீர்ப்பாம்புகள் 
துள்ளியபடி மேற்புறம் தலைநீட்டும் கெண்டைகள்
தண்ணீரும் சேறும் கலக்குமிடத்தில்
கத்தியென முட்கள் கொண்ட கெழுத்திகள்
பின்னங்கால் உதைத்து தண்ணீரில் நீந்தும் தவளைகள்
நுணர்க்கொம்புகளைச் சுருக்கி நீட்டி நகரும் நத்தைகள் 
அவ்வப்போது பறந்து வந்து தாகம் தணித்துக்கொள்ளும் புள்ளினங்கள்
களைப்பில் வர இனிக்கும் 
நீரைக் கையளித்து
உயிர் நேயத்தைப் பறைசாற்றும்
ஆதி தெண்ணீர்க் கயத்தில்
மலரவே தேவையில்லை தாமரை”.-[.(பக் -54)

“கூரைக் குடிசைகள் …… உழைப்புக் கருவிகளாய் துணைநிற்கும் மாடு, ஆடு, பன்றி, நாய், கழுதை, ஒட்டை உடைசல் பாத்திரங்கள் ஒன்றிரண்டு , சுகாதரமற்ற சூழல், நோய்க் கொடுமையால் பலர் இறந்த சோகம், சுத்தமான குடிநீர் வசதியின்மை, கழிவு நீர் அகற்றும் முறையின்மைi, கல்வி வசதியின்மை என இன்றைக்கும் தலித் மக்களின் குடியிருப்புச் சூழ்நிலை மாறாமலேயே உள்ளது.” என ப்ரதிபா ஜெயச்சந்திரன் தன் நேர்காணலில் குறிப்பிடுவது போல “இந்தியா போன்ற தேசத்தில் வாழும் ஒரு தலித், எங்கேயும் தன்னை ஒரு தலித் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள விருப்பப்படமாட்டான். அது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. தன் சாதி தெரிந்துவிட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. வருவது வரட்டும் என்ற ஒரு நிலை. தெரியாமல் இருக்கும் வரை இருக்கட்டுமே என்ற ஒரு நிலை. மதம் மாறலாம் என்பது போல ஜாதி மாற்றிக்கொள்ளலாம் என்று இந்தியாவில் சட்டம் கொண்டு வந்தால் இங்கு ஒரு தலித் கூடத் தன் ஜாதியில் இருக்கப் பிரியப்படமாட்டான்” (நவீன விருட்சம்-ஏப்ரல் ஆண்டு 2001)

நசநசத்துப் பெய்கிறது மழை
கும்மாளமிட்டு நனையும் மெல்லினா 
அதட்டலுக்குப் பின் 
தத்தித் தவழ்ந்து அருகில் வந்து
குறுநகையுடன் தலை சிலுப்ப 
தெறிக்கின்றன துளிகள் 
கோபம் தணிய 
பெருக்கெடுக்கும் மழைக்கு அவள் வாசம்”
[ப -19] “அடிப்பட்ட இடத்தில் மருந்திட்டு
பசிக்கு உணவூட்டி
தலையனை வைத்து உறங்க செய்கிறாள் மெல்லினா.
இப்போது 
அவள் கையிலிருக்கும்         பொம்மையாகிட வேண்டும்
அவ்வளவே.”[ ப-53]

-மெல்லினா என்கிற பாத்திரம் வழியாக நுண்ணழகியல் கவிதைகள் மிக அழகு.

இந்தியச் சமூக அமைப்பின் உச்சக்கட்ட கொடுமையான சாதி அமைப்பை ஒழிப்பதற்காகவே இங்கு சாதி பேசப்படுகிறது. இந்த அடிப்படையில், காலங்காலமாய்த் தொடர்ந்த கொடுமைகளுக்கு எதிராகவும், சமூக, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகவும் இந்து மத ஆதிக்கத்தை எதிர்த்துப் பண்பாட்டுக் கலகங்களாகவும் தலித் படைப்பாக்கங்கள் வேர்விடத் தொடங்கின. தலித் படைப்பாளிகள் பலரும், தம் வாழ்வியல் சோகங்களை, குமுறல்களை, ஆவேசங்களை, கோபங்களைப் படைப்புகளாக்கினர். எழுத்துக் கலையின் செய்நேர்த்தி அதற்குச் சமதையான அளவுக்கான கருப்பொருள் கொண்டதாக இல்லாது போவது என்பது ஒரு மோசடி என்பார் காஸ்டின் ஃபீடின் இங்கே படைப்புகலை என்பது தலித் படைப்பாளிகள் அனுபவங்களின் ஆழ, அகலங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திகைத்து நிற்கிறது.
தலித் படைப்புகள் வசதியாகச் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு படிப்பவர்களின் உள் உலகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது அவர்களின் மனசாட்சியைத் தொட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நியாயம் கேட்கிறது
” பறப்பதற்கு சிறகுகள் தேவையில்லை
மனம் இலகுவாதலே போதும்”-(பக் -53),போன்ற அறிக்கைகள் கவிதைகளாகாது கவிதைகளாகாது என்பதையும் கவிஞர் உணர்தல் நலம. தலித் படைப்பாளி என்பவன் வெறும் படைப்பாளி என்ற வகையில் மட்டும் நின்று விடக்கூடாது. அடிப்படையான விஷயங்களில் தலித் படைப்பாளி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இலக்கியம், எழுத்து பற்றிய அறிவைத் தலித் மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தலித் மக்களின் வாழ்க்கையையே சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்க பீடங்களிலிருந்து விடுதலைக்கான படைப்புகளை உருவாக்குவதில் தலித் படைப்பாளிகள் உத்வேகத்துடன் இயங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்


03 வண்டிக்காரன் – சந்தியூர் கோவிந்தன்
கிராமக் கதைக்களன் பின்னணியில் எளிய மக்களின்வாழ்வியல் பதிவாக 14 கதைகளின் தொகுப்பாக சந்தியூர் கோவிந்தனின் வண்டிக்காரன்.கல்வெட்டு தகவல்களில் தொடங்கி புதிய செய்திகளோடு ,வெகுமக்களின் அதிகாரத்துக்கெதிரான எதிர்க் குரல்கள்,போராட்டங்கள்,அடங்கிய கதை,மக்களின் வெற்றியை பறை சாற்றி பதிவாகிறது.டைரிக்குறிப்புகளில் இருந்து புதிய உத்தியிலொரு நெடுங்கதை பதிவாகிறது.கொங்கு மக்களின் வாழ்க்கையும்,மொழியும் மிக லாவகமாக கையாளப்பட்டு வாசகனுக்கு ஈர்ப்பைத் தருகிறது.வாசகன் புதிய கதையுலகை தரிசிக்க ஏதுவாகிறது.வழக்கமான யதார்த்த வகை லீனியர் கதைகளோடு சாமி என்கிர சாமிநாதன் வாழ்க்கைக் குறிப்புகள் போன்ற நான் லீனியர் வகையிலான கதைகளும் சந்தியூர் கோவிந்தன் சமகாலத்தைப் பிரதிபலிப்பவராக,ஆகச் சிறந்த படைப்பளியாக மிளிர்வதை உணர்த்துகிறது.

Leave a comment

Trending