விதை – நடவு-30
➢ பாலக்காடு இலக்கியச் சோலையின் விதை – நடவு-30 கடந்த 27.10.2024 ஞாயிறு அன்று தத்தமங்கலம் கவின்மணிச்சுடர் இல்லத்தில் நடந்தேறியது.
➢ நடவு, காலை 10 மணிக்கு பாவனா சு. தலைமையில் தொடங்கியது.
➢ சிறப்பு விருந்தினர்களாக — தமிழ்க் கவிஞரும் எழுத்தாளருமான பொள்ளாச்சி தமிழாசிரியர் திரு. க.அம்சப்ரியா, பாலக்காடு விக்டோரியா கல்லூரி மலையாளமொழித் துறைத் தலைவரும் எழுத்தாளருமான பேராசிரியர். டி.ஸ்ரீவல்சன், யுவ புரஸ்கார் விருதாளர் ப. காளிமுத்து — ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
➢ நிகழ்வில் முதலாவதாக, பாவனா சு. விருந்தினர்களையும் பிற பங்கேற்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
➢ பின்னர் ”யான் பெற்ற இன்பம்” தலைப்பில்………………
தமிழ்மொழித் தரப்பில் — கவிதா மணாளன், இரா.கீர்த்தி, அகமதுகனி ஆகியோரும்… மலையாளமொழித் தரப்பில் — சித்தூர் கல்லூரி மெய்யியல் பேராசிரியர். மோகனன், இலக்கிய ஆர்வலர். ஃபைசல் ஆகியோரும்… தாங்கள் படித்த கதைகள்-கவிதைகள் மற்றும் காட்சியனுபவம் குறித்த தம் அனுபவங்களை – எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர்.
➢ அடுத்து, ஆய்வியல் மாணவர் இரஞ்சினி தொடங்கிவைத்த “பனுவல் நயம்” அமர்வில்…….
க.அம்சப்ரியாவின் “உதிரும் வேர்கள்” தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு …….
இவ் அமர்வில், கவிதா மணாளன், பாவனா ப., பாவனா சு., இரா.கீர்த்தி, இரஞ்சினி, அகமதுகனி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வுக்கு வர இயலாத சித்ராதேவியின் உரை வாசிக்கப்பட்டது.
டி.ஸ்ரீவல்சனின் “முப்பது கதகள்” மலையாள சிறுகதைத் தொகுப்பு ……
இவ் அமர்வில், சீமா ராஜ்சங்கர், சிவதாசன் மடத்தில், சுஜானா அசீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
➢ முடிவில்,
—- ”உதிரும் வேர்கள்” நூலாசிரியர் க.அம்சப்ரியா அவர்கள், நூலிலுள்ள சிறுகதைகள் எவ்வாறு தம் சொந்த வாழ்வனுபவங்களிலிருந்து கருக்கொண்டு உருக்கொண்டன என்பதை விவரித்து சிறப்பான ஏற்புரை நிகழ்த்தினார்…
—- மலையாள எழுத்தாளர் பேரா.ஸ்ரீவல்சன் ஏற்புரையில், தம் புறச்சூழல் மற்றும் மனச்சூழல் சார்ந்து கதைகள் உருக்கொண்ட விதத்தையும் அவற்றை நூலாக்கம் செய்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். தம் கதைகள் குறித்து, முதன்முதலாக நேருக்குநேர் வாசகர்கள் நயந்துரைத்தது ஒரு புதிய அனுபவம் என்றும் குறிப்பிட்டார். அதற்காக தாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகவும் அதற்கு காரணமாக இருந்த “விதை” அமைப்புக்கு தம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார்..
➢ பாவனா ப. தலைமையில் நிகழ்ந்த “கவிப்பட்டறை”யில் போட்டியாளர்கள் பிரேம்தாஸ்(மலையாளம்), இரா.கீர்த்தி, இரஞ்சினி, பாவனா சு., பாவனா ப. ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். போட்டியில் இடம்பெறாது கனல்வனன்(மரபுப்பா), அகமதுகனி(ஹைக்கூ) ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
➢ நிறைவாக, சிறப்பு விருந்தினர்கள், கவிப்பட்டறை வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
➢ இந்த விதை-நடவில் மேலே குறிப்பிடப்பட்டோர் தவிர கௌதமன் ஐயா, ஜானகிப்ரியா, கல்லூரி மாணவர் ரம்யா சு. ஆகியோரும் கலந்துகொண்டனர்.
➢ கவிதா மணாளன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ் “விதை”நிகழ்வு, இறுதியில் பாவனா சு. நன்றி நவில இனிது நிறைவுற்றது

Leave a comment