கிளியே கிளியே
கவிஞர் க. மகுடபதி

கிளியே கிளியே வா வா வா
கீழே இறங்கி வா வா வா
வெளியே வேடன் கண்டாலோ.
வேட்டையாடிச் சென்றிடுவான்

பனியில் மழையில் தினம் நனைந்து
பாவம் நீஏன் வாடுகிறாய்
பனியே தாக்காக் கூடுண்டு
பச்சைக்கிளியே வா வா வா

உண்ணக் கனியும் நான்தருவேன்.
உறங்க இடமும் நான்தருவேன்
“இன்னும் எனக்கு வேண்டுமென்று நீ
இயம்பு வதெல்லாம் நான்தருவேன்
பாவை என்னிடம் பலவுண்டு – அவற்றிற்கு
பாட்டு பாடத் தெரியாது.
கோவைப்பழ அலகாலே நீயும்
கொஞ்சிப் பேச வா வா வா
அள்ளக் குறையா அருந்தமிழை – நின்
அலகால் செப்பி நான் கேட்க
செல்லக் கிளியே வாவாவா
சேர்ந்துவாழ்வோம் வா வா வா

கிளிப்படங்கள் : ஜி. சிவக்குமார்

Leave a comment