சுபாஷ் ஞானசம்பந்தன் மரபுக்கவிதைகள்

(உரை சுபாஷ் ஞானசம்பந்தன்)

வகர வர்க்க வெண்பா

வாவைவ வாவுவா வீவெளவ  வாவிவா
வீவே  வுவாவேவு வாவிவா – வீவைவு
வாவாவி வேவாவா வேவீவை வாவாவி
வேவாவ வேவுவா வா

உரை :

என்னை ஏசுவதில் மகிழ்ச்சி அடையும் நிலாவே(காதலி), பூவையும் நிலவையும் பார்த்துக் கொண்டிருக்கும் தாமரை தடாகத்திற்கு பூப்பறிக்க வா, அப்பூவைப்பறித்துத் தலையில் சூடிக் கொள். ஏனெனில் இத்தடாகம் பூவையும் நிலாவையும் மட்டுமே பார்த்ததுண்டு. ஆனால் பூச்சூடிய நிலவை பார்த்ததில்லை. ஆகையால் தடாகத்திற்கு அவ்வருங்காட்சி அளிக்க விரைந்து வா !

நியூட்டன் குறள்

குமளி விழுந்தது ஏனென்று கேட்டான்
ஞமலி பறந்ததுவிண் ணில்!

உரை :

குமளி தலையில் விழுந்தவுடன் ஏன் என்று நியூட்டன் கேட்டான், அதற்கு விடையாக புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தான். ஆகையினால், நிலவிற்கு நாய் அனுப்பப்ட்டது (நிலவுவரை எட்ட முடிந்தது)

Leave a comment

Trending