பாட்டொன்று கேட்டேன் 10 –
பாடல்களில் விரிகிற கர்ணனின் வாழ்வு
குந்தியின் மகனும்,பாண்டவர்களின் அண்ணனுமாகிய *ஷஷ்ட பாண்டவர்களில் மூத்தவனான கர்ணன், பாரதத்தில் உள்ள துயர் மிகு பாத்திரங்களில் ஒருவன்.அவனது வாழ்வின் சில பகுதிகளைக் காட்சிப்படுத்திய கர்ணன் திரைப்படம், ஜனவரி 1964 பொங்கல் பண்டிகையன்று பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் வெளி வந்தது.
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் எனத் துவங்குகிற பாடல், கர்ணனின் அறிமுகப் பாடல். நிறை சபையில் எல்லோரும் எழுந்து நிற்க, சிவாஜி,கம்பீரமாய் நடந்து வந்து முனிவரிடம் கை கூப்பி வணங்கி அரியணையில் அமர்கின்ற அழகே அழகு.

மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் என்று தொடங்கி,பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் என்று சீர்காழி கோவிந்தராஜன் முடிக்க,நாணிச் சிவந்தன மாதாரார் கண்கள் என்று துவங்கி, தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக் கரமே என்று திருச்சி லோகநாதன் முடிக்க, மன்னவர் பொருள்களை கை கொண்டு நீட்டுவார்,மற்றவர் எடுத்துக் கொள்வார் என்றபடி கம்பீரமாக உள்ளே வருகிற டி.எம்.எஸ், வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க என்று முடிக்கிறார்.
கர்ணன்,சூரிய பகவானை வழிபடச் செல்கையில் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி என்று துவங்கி,போற்றி போற்றி என முடிகிற இடத்தில்,என்ன கொடுப்பான்,எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே என்று பிபிஸ்ரீனிவாஸ் இழைகிறார்.
இந்தப் பாடலில்,எத்தனை எத்தனை ஆளுமைகள்.அடடா! வயோதிகராக வந்து சுய உருவம் பெறும் இந்திரனான இராமதாஸ் இத்தனை அழகுடன் வேறெந்தப் படத்திலும் இருந்ததாக நினைவில்லை.
பார்த்திபன் என்பது அர்ஜுனனின் பெயரல்லவா? கண்ணதாசன், கர்ணனைப் பார்த்திபன் என்கிறாரே என்று தமிழ் விக்சனரியைப் பார்த்தால், அது, பார்த்திபன் என்றால் அரசன் என்கிறது.
கர்ணனுக்கும் அவன் மனைவி சுபாங்கிக்குமிடையே காதல் மலர்கிறது.கர்ணனின் நினைவில் அவளின் தவிப்பு, கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே?கண்ட போதே சென்றன அங்கே என்ற பாடலின் வார்த்தைகளில் எப்படிக் கொந்தளிக்கிறது பாருங்கள்.கொடை கொடுத்தே பழகிய கர்ணனை,தன்னக் காப்பாற்றியதால்,கண்டதும் காதல் கொண்ட சுபாங்கி,கொடை கொண்ட மத யானை என்று வர்ணிக்கிறாள்.
இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்
திருமண வாழ்வில் கலந்த கர்ணன்,சுபாங்கி தம்பதியினரின் இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே பாடல் மற்றுமொரு அற்புதம்.இந்தப் பாடலில் ஒரு சிறப்பு என்னவென்றால் வழக்கம் போல் ஆண் தன் தவிப்பை வெளிப்படுத்தி பெண் அவனைத் தடுப்பது போலில்லாமல்,பெண் தவிக்க ஆண் தடுப்பதுதான்.
பெண் : ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
ஆண் : அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
பெண் : நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
ஆண் : அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
தன் பிறப்பால், சபை நடுவே அவமானப்படுத்தப்பட்டு கொந்தளிக்கும் மனதுடன் அரண்மனைக்குத் திரும்புகிற கர்ணனை ஆற்றுப்படுத்த அவன் மனைவி சுபாங்கி பாடும், கண்ணுக்கு குலமேது
கண்ணா. கருணைக்கு இனமேது பாடலில் இந்த வரிகளின் அழகையும்,அர்த்தத்தையும் கொண்டாட வேண்டும் இல்லையா?
பாலினில் இருந்தே நெய் பிறக்கும்
கண்ணா பரம் பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்?
வெளியில் பட்ட துன்பம் தாளாமல் அமைதி தேடி வீட்டிற்கு வந்தால் மனைவி படுத்தும் பாட்டிற்கு அது எவ்வளவோ பரவாயில்லை என்று வெளியில் துரத்தப்படும் எத்தனையோ ஆண்களை நினைத்தால்,கர்ணன் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி.
இவரு பெரிய கர்ண மகாப் பிரபு என்று கேலி செய்வதை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்.ஒரு கதை சொல்லட்டுமா?
தருமர் ஒரு முறை கண்ணனிடம் கேட்கிறார்.என்னைப் போலவே எத்தனையோ பேர் தான தருமங்கள் செய்கிறோம்.ஆனால்,கர்ணன் மட்டுமே தானத்தில் சிறந்தவன் என்று ஏன் சொல்கிறார்கள்?
நேரடியாக பதில் சொல்லாத கண்ணன்,மறு நாள் இரண்டு சிறு குன்றுகளாக பொன்னைக் குவித்து,அதை தருமனிடம் தானம் செய்யச் சொன்னான்.
ஒரு நாள் முழுவதும் தர்மன்,அதை வரிசையில் நிற்கும் யாசகர்களுக்கு வழங்கிக் கொண்டே இருந்தான்.அப்படியும் அது தீரவில்லை.
மறு நாள் அதையே கர்ணனைச் செய்யச் சொன்னான் கண்ணன்.
கர்ணன்,இரண்டு பேரை அழைத்து,அவர்களிடம் கொடுத்து விட்டுப் போய் விட்டான்.
இப்போது புரிகிறதா என்று தர்மனைப் பார்த்துச் சிரித்தான் கண்ணன்.
அப்பேர்ப்பட்ட கர்ணனைப் பார்த்து
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
பாடலில் கர்ணனின் மனைவி சுபாங்கி கேட்கிறாள்.
வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா
எந்த மன்னவர்க்கும்
வழங்குவது மனைவியில்லையா
ஆஹா என்ன ஒரு கற்பனை.கண்ணதாசனை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் போலில்லையா.
இந்தப் பாடல் திரைப் படத்தில் இடம் பெறவில்லை என்பது ஆச்சர்யமான தகவல்.நீளம் கருதி என்கிறார்கள்.
போர்க் களத்தில் தயங்கி மயங்கும் அர்ச்சுனனைத் தெளிய வைக்க கண்ணன் உபதேசித்த பகவத் கீதையை இரத்தினச் சுருக்கமாக கண்ணதாசன் எப்படி நம் கைகளில் தருகிறார் பாருங்கள்
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய்
மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக் களமெலாம் சிவக்க
வாழ்க
கர்ணன் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் சிறப்பு என்றாலும்,அப் பாடல்களில் உச்சமென நான் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைச் சொல்வேன்.போர்க் களத்தில் அம்புகள் பாய்ந்து தேர்ச் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கிற கண்ணனின் உயிரை அவன் செய்த தர்மம் தக்க சமயத்தில் காக்கிறது. கொலைகாரன் கண்ணன்,அந்த தர்மத்தையும் தானமாகப் பெற்று கர்ணனின் கதையை முடிக்க வருகையில்தான் இந்தப் பாடல் துவங்குகிறது.
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
இப்படி,கர்ணனின் மொத்த வாழ்வையும் ஒரு திரைப்படப் பாடலில் அலட்சியமாகச் சொல்ல கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் முடியும்?
மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
என்று கண்ணனுக்காக கண்ணதாசன் மன்னிப்புக் கேட்கிற அற்புதமும் இந்தப் பாடலில் நிகழ்கிறது.
கண்ணதாசன் அற்புதமாகப் பாடல் எழுதுகிறார்.எம். எஸ். விசுவநாதனும் இராம மூர்த்தியும் அற்புதமாக இசையமைக்கின்றனர்.சீர்காழி கோவிந்தராஜன் அற்புதமாகப் பாடுகிறார்.கலியுகக் கண்ணன் என்.டி.ஆர் அற்புதமாக வாயசைத்து நடிக்கிறார்.அத்தனை பேரையும் அப்படியே தூக்கி விழுங்கி விடுகிறார், உடலெங்கும் அம்புகள் பாய்ந்து தேர்ச் சக்கரத்தில் சாய்ந்தபடி ஆ….ஆஆஆஆ என்று அரற்றும் சிவாஜி கணேசன்.
திரைப்படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல்,பாடல்களை மட்டும் வரிசைக்கிரமமாகக் கேட்பதன் வழி,கர்ணனின் துயர் வாழ்வும்,காதல் மணமும்,அநியாய மரணமும் கண்களின் முன் விரிகிறதல்லவா?அதுதான், கண்ணதாசனின்,மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் வி.ராம மூர்த்தியி்ணன் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் சிறப்பு என்றாலும்,அப் பாடல்களில் உச்சமென நான் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைச் சொல்வேன்.போர்க் களத்தில் அம்புகள் பாய்ந்து தேர்ச் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கிற கண்ணனின் உயிரை அவன் செய்த தர்மம் தக்க சமயத்தில் காக்கிறது. கொலைகாரன் கண்ணன்,அந்த தர்மத்தையும் தானமாகப் பெற்று கர்ணனின் கதையை முடிக்க வருகையில்தான் இந்தப் பாடல் துவங்குகிறது.தாய்க்கு நீ மகனில்லைதம்பிக்கு அண்ணனில்லைசெஞ்சோற்றுக் கடன் தீர்க்கசேராத இடம் சேர்ந்துவஞ்சத்தில் வீழ்ந்தாயடாஇப்படி,கர்ணனின் மொத்த வாழ்வையும் ஒரு திரைப்படப் பாடலில் அலட்சியமாகச் சொல்ல கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் முடியும்?மன்னவர் பணி ஏற்கும்கண்ணனும் பணி செய்யஉன்னடி பணிவானடா கர்ணாமன்னித்து அருள்வாயடா கர்ணாஎன்று கண்ணனுக்காக கண்ணதாசன் மன்னிப்புக் கேட்கிற அற்புதமும் இந்தப் பாடலில் நிகழ்கிறது.கண்ணதாசன் அற்புதமாகப் பாடல் எழுதுகிறார்.எம். எஸ். விசுவநாதனும் வி.கே.ராம மூர்த்தியும் அற்புதமாக இசையமைக்கின்றனர்.சீர்காழி கோவிந்தராஜன் அற்புதமாகப் பாடுகிறார்.கலியுகக் கண்ணன் என்.டி.ஆர் அற்புதமாக வாயசைத்து நடிக்கிறார்.அத்தனை பேரையும் அப்படியே தூக்கி விழுங்கி விடுகிறார், உடலெங்கும் அம்புகள் பாய்ந்து தேர்ச் சக்கரத்தில் சாய்ந்தபடி ஆ….ஆஆஆஆ என்று அரற்றும் சிவாஜி கணேசன்.திரைப்படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல்,பாடல்களை மட்டும் வரிசைக்கிரமமாகக் கேட்பதன் வழி,கர்ணனின் துயர் வாழ்வும்,காதல் மணமும்,அநியாய மரணமும் கண்களின் முன் விரிகிறதல்லவா?அதுதான், கவியரசர் கண்ணதாசனின்,மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் டி.கே.ராமமூர்த்தியி
—
* பஞ்ச பாண்டவர் ஐவர், கர்ணனோடு அறுவர் என்பதால் ஷஷ்ட பாண்டவர். (ஷஷ்ட சொல்லுதவி க.கதிரவன்)

Leave a comment