இரா. கீர்த்தி

புத்தரைப் போல்
துறவியாக்கத் தேவையில்லை

மதமொன்று அமைத்து
கொள்கை பின்பற்ற
அவசியமில்லை

கணவன் குழந்தை குடும்பமென
முற்றும் துறந்து
நடுநிசியில் எழுந்துபோனவள்
யசோதை எனில்

எப்படி அழைக்கப்பட்டிருப்பாள்?

Leave a comment

Trending