கவிதை
வேர் என நீ இருந்தாய்…
பாக்யபாரதி
வெளிச்சக் கீற்றில்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்
காலம்
என்னை மட்டும்
இருளிலே அமர்த்தியிருந்தது…
தொடர் தோல்விகளைத்
தோரணங்களாகப்
பார்க்கும் பக்குவத்தைத்
தாரமே
நீதானெனக்குள் விதைத்தாய்…
விடியலைக் காணக்
காத்துக் கிடந்த
என்னிடமிருந்து
விலகிச் செல்ல
உழைப்பை
ஒருபோதும் அனுமதித்ததில்லை
நீ பற்றவைத்த
நம்பிக்கைச் சுடர்கள்!
குடும்பச் சுமைகளைச்
சுமந்து செல்வதில்
ஓய்வைத் தேடித்தேடி
ஓய்ந்து போனாலும்
வீழ்ந்து போகாமலிருக்க
வேரென நீயிருந்தாய்..!
இன்று
வெற்றிப் படியைத்
தொட்டுவிட்டேன்
உன்
சுயநலமற்ற சொற்களால்..!
#பாக்யபாரதி✍️
தருமபுரி
6382441306

Leave a comment