இயல்-1 தமிழ்க் காட்சியியல் : நுதலியது அறிதல்(பகுதி 2)
நிர்மல் செல்வமணி
(இயல்-1 தமிழ்க் காட்சியியல் : நுதலியது அறிதல்(பகுதி 1)-இன் தொடர்ச்சி)
இனி, இத்துறைக்கு உரிய மரபான தமிழ்ப் பெயர் யாது எனக் காண்போம். அதற்குத் துணையாகத் தொல்காப்பியத் தையும் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் கொள்ளு வோம் இலையே திணைக் குமுகாய மரபைப் பேணும் நன்னூல்களாதலால் இந்நூல்களில் மெய்ந்நூல் தொடர்பான் தொடர்களை விளக்க முற்படுவோம்.
தொல்காப்பியம்
1. ஒத்த காட்சி உத்திவகை, III.9.112:1
2. உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர்க் காட்சிக் கற்பு சிறந்தன்று, II.3.23:1-2
3. பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியும் காட்சி யான, I.3.1.87-8
4. ஒத்த காட்சி தன்னியல் பியலும், I.3.19
5. கலையென் காட்சி உழைக்கு முரித்தே, III.9.47
சிறுபாணாற்றுப்படை
மடவோர் காட்சி நாணி, 138
குறிஞ்சிப்பாட்டு
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொன்மருங் கறிஞர், 15-18
பெரும்பாணாற்றுப்படை
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டுநர்க் கருளி
இடைதெரிந் துணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்து
உரும்பில் சுற்றமோ டிருந்தோன் குறுகி, 441-47
பொருநராற்றுப்படை
அணங்குமெய்ந் நின்ற வமைவரு காட்சி, 20
மலைபடுகடாம்
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ, 49-50
திருமுருகாற்றுப்படை
காமமொடு கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர், 135-7
பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர், 166-68
எட்டுத்தொகை : புறநானூறு
கல்பொரு திரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம், 192:8-11
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழு துண்மார், 170:3-4
நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
எண்ணில் காட்சி யிளையோர், 213:14-15
இம்மை போலக் காட்டி யுண்மை
இடையில் காட்சி நின்னோ டுடனுறை
வாக்குக வுயர்ந்த பாலே, 236:10-12
அமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவர், 213:6
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு, 210:2
செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறா அர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே, 214:1-3
அகநானூறு
செறு நரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
பல்லோர் கூறியப் பழமொழி, 66:3-5
என்னழி பிரங்கும் நின்னொடி யானும்
ஆறன் றென்னா வேறல் காட்சி, 73:8-9
அருளன் றாக ஆள்வினை ஆடவர்
பொருளென வலித்த பொருளல் காட்சியின்
மைந்துமலி உள்ளமொடு, 75:1-3
கடுத்தது பிழைக்குவ தாயின் தொடுத்த
கைவிரல் கவ்வுங் கல்லாக் காட்சி
. . . . . . . . . . . . .. . . . ஏவல் ஆடவர், 215:7-10
உயிரினுஞ் சிறந்த ஒண்பொருள் தருமார்
நன்றுபுரி காட்சியர் சென்றவர், 245:1-2
கலித்தொகை
காதலன் காட்சி யழுங்க நம்மூர்க் கெலாஅ
ஆகுலமாகி விளைந்ததை, 65:25-27
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடுகாப் பியாத்துவிட் டாங்கு, 94:42-73
அருள் தீர்ந்த காட்சியான் அறனோக்கான் நயஞ் செய்யான், 120:1
ஐங்குறுநூறு
ஒள்ளிழை சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோ நின் மாமைக் கவினே. 470:3-5
பரிபாடல்
நலமுழு தளை இய புகரறு காட்சிப்
புலமும் பூவனும் நாற்றமு நீ, 1:45-46
குறுந்தொகை
சென்றுநாம் முயங்க ற்(கு) அருட்காட் சியமே. 305:3
காட்சி என்ற சொல்லின் முன் ஒத்த ஆசறு, துனியில், இகலில், துகள் தபு, இருள்தீர் போன்ற அடைகள் சேர்க்கப்பட்டுள்ளன. புறக்கண்ணால் தோன்றும் உணர்வினின்று, (காட்சியினின்று) அகக் கண்ணால் காணும் காட்சி வேறுபட்டது என்று இவ்வடைகள் உணர்த்துகின்றன. அத்துடன், அக் காட்சியின் இயல்பினையும் விளக்கி நிற்கின்றன.
1. செயிர்தீர் காட்சி: செயிர், சினம், சினம் எனும் குற்றம்; சினத்தை நீக்கும் ஞானம். ஒன்றைப் பற்றிய மெய்யறிவான ஞானம் தோன்ற அப்பொருள் மீதுள்ள பற்று நீங்கும்; பற்று நீங்க உணர்ச்சி அடங் கும். எனவே, ஞானம் என்பது சினம் உணர்ச்சியைத் தீர்க்கும். ஞானத்திற் பிறக்கும் மெய்ந் நூலுக்கும் இது பொருந்தும். எனும்
2. இடைதெரிந்துணரும் இருள்தீர் காட்சி: நடுவுநிலையை ஆராய்ந்தறியும், அறியாமையைப் போக்கும் ஞானம்.
3. நன்றுபுரி காட்சியர்: நன்மையைச் செய்யும் ஞானம் உடையவர்.
4. ஒத்த காட்சி உத்திவகை: ஒத்த, ஏற்புடைய ஒத்த காட்சி, ஏற்புடைய மெய்ந்நூல். அந்நூலுக்குரிய உத்தி வகைகள். இங்கு நல்லறிவு என்ற பொருள் நன்கு பொருந்தாமை காண்க.
5. ஆசறு காட்சி ஐயர்: ஆசு, பற்றுக்கோடு, பற்று; ஆசு – ஆசை பற்று.24 “பற்றை அறுத்தற்குத் துணை புரியும் மெய்ந்நூல் வல்ல பெரியோர்”, “பற்றை அறுக்கும் ஞானம் உடைய பெரியோர்” என்பதும் பொருந்துவதே.
6. துகள்தபு காட்சி அவையத்தார்: துகள், குற்றம். தபு – நீக்கு; “குற்றம் நீக்கும் ஞானம் உடைய அவை யத்தார்” (குற்றம்: அறியாமை, மயக்கம்) என்றும். குற்றம் நீக்கும் மெய்ந்நூல் வல்ல அவையத்தார் என்றும் பொருள்படும்.
7. கடுஞ்சினம் கடிந்த காட்சியர்: இங்கு, ‘காட்சியர்’ என்பது ஞானம் உடையோர் என்றும். மெய்ந்நூல் வல்லோர் என்றும், பொருள் தரும்.
8, பகலில் தோன்றும் இசுலில் காட்சி: பகல், பகுத்தல்; இகல்,மாறுபாடு. பகுத்துக் காணுங்கால் மாறுபாடு இல்லாத ஞானம் (உடைய தேவர் போன்றோர்) என்றும், பகுத்துங் காணுங்கால் மாறுபாடு தோன் றாத மெய்ந்நூல் (வல்ல தேவர் போன்றோர்) என் றும் பொருள் தோன்றும்.
9. திறவோர் காட்சி : திறம் கோட்பாடு; ஒரு குறித்த கோட்பாடினைச் சார்ந்த மெய்ந்நூல் வல்லுநர்.
பழந்தமிழ் நூல்களில் பயிலும் காட்சி என்ற சொல்லுக்கு அடிப்படைப் பொருள் மூன்றுள; அவை:
1) புறக்கண்ணால் ஏற்படும் தோற்றம் 25;
2) பெயர்26;
3) அகக்கண்ணால் ஏற்படும் கருத்து, ஒரு பொருள் பற்றிய அறிவு27
மேற்கூறிய மூன்று பொருள்களுள் இரண்டாவது பொருள் தொல்காப்பியத்துள் மட்டுமே உண்டு. இது முதலாம் பொருளின் வழிப் பொருளே. அதாவது, பெயர் என்பது ஒருவகைத் தோற்றமே. ஒரு பொருளின் பெயர் அதன் சாயலை ஒருவாறு உடையதே என்று பழந்தமிழர் கருதினர். அதனால் பெயரை அப்பொருளின் தோற்றம், அதாவது, காட்சி எனக் குறித்தனர். அவ்வாறே, பனம்பாரனாரும் ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி’ என்று பாயிரம் செய்தார். தோற்றி— தோன்றி’ தோன்றச் செய்து.
பொதுவாகக் கண்களால் உணர்வதைக் காட்சி என்பர். இதனை முதலாவது பொருள்குறித்தது. அகத்துறுப்பாம் அறிவு போன்றவற்றால் உணர்வதும் ஒருவகைக் காட்சியே என்று பழந்தமிழர் கொண்டனர். இதனை மூன்றாவது பொருள் குறித்தது. அககாட்சி இருவகைப்படும். பொல்லாக் காட்சி, நற்காட்சி. பொல்லாக்காட்சி என்பது மயக்கம். அறிவு மயங்கித் தெளிவற்ற நிலை; இதனைக் கசடீண்டு காட்சி’, பொல்லாக் காட்சி’ என்று குறித்தனர். வில்லால் விலங்கை வீழ்த்தி வாழ்வோரின் தெளிவற்ற அறிவை மருத்துவன் தாமோதரனார் ‘கல்லாக் காட்சி 28 என்றார். தமது தந்தையாம். கோப்பெருஞ் சோழனுடனே போர்செய்தற்கு எழுந்த புதல்வர் நிறைவான, தெளிந்த அறிவுடையவர் அல்லர் என்பதைக் கருதி அவரைப் புல்லாற்றூர் எயிற்றியனார் ‘எண்ணில் காட்சி இளையோர்’ 29 என்றார்.
பொல்லாக் காட்சிக்கு எதிர்மறையான நற்காட்சியை ஒத்த காட்சி, ஆசறு காட்சி, துனியில் காட்சி, நன்றுபுரி காட்சி, செயிர்தீர் காட்சி, இருள்தீர் காட்சி, இகலில் காட்சி, துகள் தபு காட்சி, புகரறு காட்சி, திறவோர் காட்சி, புனிறில் காட்சி எனப் பல்வேறு அடைகளைச் சேர்த்துக் குறித்தனர்.
இவ்வாறு குறித்த காட்சி என்பதன் பொருள் ‘அறிவு. என்பார் உரையாசிரியர் .30 அப்பொருள் சாலப் பொருந்துவதன்று. எடுத்துக்காட்டாக, ‘ஒத்த காட்சி உத்தி’ என்ற விடத்து ஒத்த அறிவுக்குரிய உத்தி என்பது பொருட்பேறு உடைய விளக்கமன்று. அவ்வாறே பெருங்கதைத் தொடரான காள சமணன் காட்சி நிறுப்ப’ என்பதில் காட்சி என்பதற்கு அறிவு என்ற பொருள் பொருந்தாது. புறநானூற்றுத் தொடரான ‘திறவோர் காட்சியிற் தெளிந்தனம்’ என்பதில் ‘காட்சி’ என்பது ‘அறிவு’ எனின், திறவோரின் அறிவினால் தெளி வடைந்தோம் என்று பொருள்படும். அங்ஙனமெனின், திற வோரின் அறிவினால் பிறர் எவ்வாறு தெளிவடையவியலும்? ஏதேனும் ஒரு பொருளாக (சொல்லாகவோ, பிறிது பொருளாகவோ) அவ்வறிவு வெளிப்பட, அவ்வெளிப்பாட்டினைக் கண்டே பிறர் தெளிவடையவியலும்
காட்சி என்பதன் பொருளினைப் பின்வருமாறு வகைப் படுத்தலாம்:
காட்சி
புறம்
தோற்றம்
பெயர்
நற்காட்சி ஞானம்
பொல்லாக்காட்சி அறிவு மயக்கம்
மெய்ந்நூல் ۱۰
அகம்
அதாவது, காட்சி என்பதற்கு ‘அறிவு’ என்ற பொருள் நேரியது அன்று என்பது மேற்கண்ட வரைப்படத்தினின்று விளங்கும். அகக்கண்ணுள் ஒரு பொருள் தோன்றுவதை அப் பொருள் பற்றிய கருத்து எனக்கொண்டால் அக்கருத்து தெளி வானதாகவோ தெளிவற்றதாகவோ அமையலாம். தெளிவான கருத்தைக் ‘காட்சி’ எனக் குறிப்பிடின். அது (அப்பொருள் பற்றிய) ஞானம் என்பதாகும்; தெளிவற்ற கருத்தைக் காட்சி எனின், அதனைக் ‘கசடீண்டு’ போன்ற அடையால் உணர்த்து வது மரபு. இதனின்றும், காட்சி என்பதற்கு உரைக்காரர் உரைத்துவரும் ‘அறிவு’ என்ற பொதுப் பொருள் முற்றிலும் ஏற்புடையதாகாமை அறிக.
காட்சி:பொருள் விளக்க மேற்கோள்
I. புறக்கண்ணால் காண்பது
1. தோற்றம் அமைவரு காட்சி (அழகிய தோற்றம்) பொரு.20
காதலன் காட்சி, கலி. 6. 65: 26
ஆற்றிடைக் காட்சி, தொல். III 2. 36:4
2. பெயர் : கலையென் காட்சி (கலை என்னும் பெயர்) தொல். III 9.47
II. அகக்கண்ணால் காண்பது
1. பொல்லாக் காட்சி (தெளிவற்ற கருத்து)
கசடீண்டு காட்சி, புற. 214: 2
பொருளல் காட்சி, அக.75: 2
அருள்தீர்ந்த காட்சி, கலி.. 120: 1
அறனில் காட்சி, புற. 210: 2
2. நற்காட்சி (நற்கருத்து)
செயிர்தீர் காட்சிச் சிறுவர், அக. 66: 3
புகரறு காட்சிப் புலமும் நீ பரி. 1. 45-46
3. மெய்ந்நூல்
ஒத்த காட்சி உத்தி, தொல். III. 9. 112:1
ஆசறு காட்சி ஐயர், திரு. 17.
துகள்தபு காட்சி அவையத்தார், கலி.94: 42
திறவோர் காட்சியின், புற. 192.: 10
பகலில் தோன்றும் இகலில் காட்சி, திரு. 166
காட்சி (ஞானம்) என்பது அறிவு, உணர்வு, உள்ளம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது:
அறிவின் பங்கு : இகலில் காட்சி, இருள்தீர் காட்சி என்ற தொடர்களில் இகல் என்ற மாறுபாடு அறிவினால் நீங்குவதாகையாலும், இருள் என்றது அறியாமையைக் குறிப்பதாலும் இத்தொடர்கள் ஞானத்தில் அறிவின் பங்கைச் சுட்டுவனவாகும்.
உணர்வுப் பகுதி: ‘துனியில் காட்சி’, ஆசறுகாட்சி, ‘செயிர்தீர் காட்சி’ என்ற தொடர்கள் உணர்வு சார்ந்தலை. துனி, வெறுப்பு; ஆசு, பற்று; செயிர், சினம்.
உள்ளத்தின் பங்கு: நன்றுபுரி காட்சியர் என்ற தொடரை நோக்குக உள்ளம் என்பது செயலை ஊக்குவதால் இங்கு நன்மை செய்வோராக (புரிவோராக) ஞானம் உடை யவர் இருத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றால், ‘காட்சி’ என்பது அறிவை மட்டும் குறிக்கும் என்பது பொருந்தாமை விளங்கும். அது ஞானம் என்ற நல்லறிவையும், மெய்ந்நூலையும் ஒருங்கே குறிக்கும் தொல் பழந்தமிழ்ச் சொல் என்பதும் தெளிவாகும்.
மெய்ந்நூல் என்பதற்குரிய நற்றமிழ்ச்சொல் காட்சி என்ப தால் இதுகாறும் பயன்படுத்திய மெய்ந்நூல் என்ற சொல்லை விட்டுக் காட்சி என்பதையே இக்கட்டுரையில் பயன்படுத்து வோம்…’ஒத்த காட்சி உத்திவகை’ என்றவிடத்து அடையுடன் இச்சொல் வரினும், ‘திறவோர் காட்சி’ என்றவிடத்து அடை யின்றி வந்ததால் காட்சி என்ற மாத்திரையானே மெய்ந் நூலை உணர்த்தவல்லது என்போம்.
தொல்காப்பியம், தொகை,பாட்டு ஆகிய பழந்தமிழ் நூல் களில் இத்துறையைக் குறிக்கப் பிறிதொரு மரபுச் சொல் இன்மையாலும் காட்சி என்பதுவே பெரிதும் ஆட்சி பெற்றி ருந்தமை புலனாகும்.
வடநூல்களில் மெய்ந்நூலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல் தர்சன என்று முன்னரே குறித்தோம் அதன் பொருள் காணுதல்’, ‘காட்சி’ என்பதே.’ஆறு தரிசனங்கள்’ என்ற வழக்கில் தரிசனம் மெய்ந்நூற் கோட்பாடுகளையே குறித்தது. இச்சொல் கி.மு. முதல் நூற்றாண்டிலேயே இப்பொருளில் ஆளப்பெற்றது என்பார் சந்திரவித்யபூஷண. 31 அதற்கும் முன்னரே காட்சி என்ற சொல் இப்பொருளில் வழங்கியதால், காட்சியின் மொழிபெயர்ப்புச் சொல்லாகவே தர்சன என்பது அறிமுகமானது எனலாம்.
இனி, தர்சன என்ற சொல்லைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் ‘காட்சி’ என்ற சொல்லையே நேரியதாகக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 32
மெய்ந்நூலைக் காட்சி எனக் குறிப்பது மரபாகத் தொடர்ந்து வந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் ஒரு பாடல் இம்மரபுத் தொடர்ச்சியைக் காட்டுவதாகும்.
ஐயந்திரி பின்றளந் துத்தியின் தெளிந்து
மெய்யுணர்ச் சிக்கண் விழிப்பத் தூங்குவார் தம்முளே
காண்பதே காட்சி; கனவு நனவாகப்
பூண்பதே தீர்த்த பொருள். .(101)
இப்பாடலில் பயின்றுள்ள காட்சித்துறைச் சிறப்புச் சொற்க ளாவன: அளந்து, உத்தி, மெய்யுணர்ச்சிக்கண், காட்சி என்பன. காட்சி என்பது அளவையைப் பயன்படுத்துவது, உத்திகளைக் கடைப்பிடிப்பது, மனத்தால் காண்பது, என்பதை இப்பாடல் சுட்டுகின்றது. ‘ஒத்த காட்சி உத்தி’ என்ற தொல்காப்பியத் தொடருக்கு உரிய பிற்கால விளக்கமாக இப்பாடலைக் கொள்ளலாம்.
காட்சி என்பது எண்வகைப்படும் என்றதொரு மரபும் உண்டு.
பிங்கல நிகண்டு குறிப்பிடும் எண்வகைக் காட்சியாவன. அறத்தை ஐயப்படாது செய்தல், அவா சிறிதும் இன்மை உவர்ப்பில்லாத அறிவுடைமை, மூடமறுத்தல், மிகவும் பழி மறுத்தல், அழிந்தோரை நிறுத்தல், அறத்தை விளக்கல், அறு சமயத்தவர்க்கு அன்பு என்பன. இவ்வெண் செயல்களும் காட்சியருக்கு (மெய்ந்நூல் வல்லு நருக்கு) உரியன என்பதைக் கவனிக்கக் ‘காட்சியன்’ நன்று செய்பவன் .(ஆதலால் பழிதரு பவற்றைச் செய்யாதவன்; எளியவருக்குத் துணையாய் நின்று அவரை ஆதரிப்பவன்.) என்பது விளங்கும். அவன் அறம் செய்வோன், அதனை விளக்கவும் வல்லவன். எப்போதும் பிற காட்சியருடன் பழக வேண்டுமாதலால் அவரிடம் அன்பு கொள்பவன். பற்றற்றவன் (அதாவது, அவா அறுத்தவன்). ஆதலால் உடல் வருத்தம் பாராதவன். எனவே, உடலை மூட மறுத்தவன், நல்லறிவு உடையவன் (ஆதலின் ஒன்றின் மெய்ப்பொருளை அறிந்தவன்).
அறம்,பொருள், இன்பம் என்ற மூன்றிலும் காட்சியன் நாட்டம் உடையவன் என்பதே ‘எண்வகைக் காட்சி’ என்ற கருத்தின் உட்கிடையாகும்.
அற நாட்டம்: அறத்தை ஐயப்படாது செய்தல் என்பதோடு ‘நன்றுபுரி காட்சியர்’ என்ற அக. தொடரை ஒப்பு நோக்குக.
பொருள் நாட்டம்: உவர்ப்பில்லாத அறிவுடைமையால் காட்சியன் நற்பொருள் காணவல்லவன் என்பதை அறியலாம். 33
இன்ப நாடடம்: அவா சிறிதும் இன்மையால் துன்பம் இல்லை. 34
காட்சி: சொல் பொருள்
அண், நெருங்கு, பொருந்து. க் +அண்-கண், பொருந்து, பிற் பொருளோடு சென்று பொருந்தச் செய்; (பெயர்) அவ்வாறு பொருந்தும் உறுப்பு: (வினை) பிற பொருளோடு பொருந்துவதால் அதுபற்றி அறியத் தலைப்படு – கண்-காண்-காட்சி
காட்சி என்பதன் பொருள்: 1) புறக்கண்களின் வழி ஏற்படும் ஒரு பொருளின் தோற்றம்.2) அறிவு, உணர்வு, உள்ளம் என்ற பகுதிகள் கொண்ட மனம் என்ற அகக்கண் ணின் வழி ஏற்படும் ஒரு பொருள் பற்றிய கருத்து.
புறக்கண்ணால் தோன்றும் காட்சி முரண்பாடு உள்ளதாகவோ, பிழைபட்டதாகவோ, குறைவானதாகவோ, தெளிவற்றதாகவோ இருக்க வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, பழுதையைப் பாம்பெனப் பிறழ உணர்வது புறக்காட்சி. புறக் கண்ணால் பொருளின் புறங்காண்பது போன்று அகக்கண்ணாம் மனத்தால் அதன் அகங்காணலாம்.
இனி, அறிவு, உணர்வு, உள்ளம் என்ற அகத்துறுப்புக் களைச் சரிவரப் பயன்படுத்தாவிடின் அகக்காட்சியும் பிழை படும். புல்லாற்றூர் எயிற்றியனார் இதனைக் ‘கசடீண்டு காட்சி’ 36 என்றார். சீத்தலைச்சாத்தனாரோ பொல்லாக் காட்சி”37 எனக் குறித்தார். இது, காமம், வெகுளி, மயக்கம் என்று குறிக்கப்பெற்ற முக்குற்றங்களுள் மூன்றாவதாகும்.
அகத்தால் காணுதலும் அகத்தைக் காணுதலும்
புறக்காட்சி (காண்டல்), அகக்காட்சி என்ற இருவகைக் காட்சிகளுள் அகக்காட்சி என்பது அகத்தால் பொருளைக் காண்பது என்றே விளக்கினோம். ஆனால், அகத்தைக் காண்பதே மெய்க்காட்சி என்ற தர்சன என்று வடநூல்கள் கூறும். தர்சன என்பது ஆன்மா என்ற அகத்தைக் காண்பது என்பர். 38 இக்கருத்து பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்றிலது. எனவே, இது பழந்தமிழ்க் காட்சி மரபிற்கு ஒவ்வாதது.
அகத்தைக் காணுதல் என்பது ஏன் ஏற்புடையதன்று எனக் காண்போம். புறக்கண்ணால் நாம் பொருள்களைக் காண் கின்றோம். ஆனால் அக்கண்களையே நாம் காணவியலாது. அதுபோல, அகக்கண்ணால் காணவியலுமே அன்றி, அக் கண்ணையே காண்பது என்பது ஏற்புடையதாகத் தோன்றிந் றிலது. இங்கு, அகக்கண் என்பது அகம்.
இனி, ஒருவன் தனது புற (உடல்) நிழலை ஆடியில் காண்பது போன்று தனது அகத்தைப் பற்றியும் கருதலாம். மொழி என்ற ஆடியின் துணைகொண்டு அகத்தைப் பற்றிச் சிந்திக்கலாமேயொழிய அகத்தையே அம்மொழியில் காண வியலாது. உடலின் நிழல் உடலாகாதது போன்று, அகத்தைப் பற்றிய கருத்தும் அகமாகாது என்பது ஓர்க.
தன்னைத்தான் அறிதல் வேண்டும் என்று அறிஞன் கூறு மிடத்து, தன்னைப் பற்றிய அறிவையே குறிப்பிடுகின்றனர் எனலாம். தன்னைப் பற்றிய அறிவை உருவகமாக அகங் காண்டல்’ எனச் சுட்டுகின்றனர் எனக் கொள்ளலாமே அன்றி ‘அகத்தைக் காண்டல்’ என்ற நேர்ப்பொருளையே சுட்டுகின்ற னர் என்பது தமிழ்க்காட்சி மரபன்மை அறிக.
குறிப்புகள்:
24. ஒ.நோ: ம் +ஆசு = மாசு, ஒரு பொருள் மேல் பற்றியிருக்கும் தூசி.
25. எ – டு: “அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி”, பொரு.20; தொல். III 2. 5:19; புற. 213:6.
26. “கலையென் காட்சி உழைக்கும் உரித்தே’, தொல் III. 9. 47.
27. “கல்லாக் காட்சி வில்லுழு துண்மார்”, புற. 170: 3-4 என்றவிடத்தில் கல்வியினால் அன்றிப் பிறவகையால் தோன்றிய அறிவினால் வில் என்ற ஏரால் உழுது உண் பார்” என்று பொருள்படும்; எண்ணில் காட்சி யிளையோர் (சூழ்ச்சியில்லாத அறிவை உடைய புதல்வர்) புற. 213:15; “செய்குவங் கொல்லோ நல்வினை எனவே | ஐயமறாஅர் கசடீண்டு காட்சி/நீங்கா நெஞ்சத்துத் துணிவில்லோரே”, புற. 214.1-3 என்பதில் “கசடீண்டு காட்சி” என்பது ”தெளிவில்லாத அறிவு”, “வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென் றுள்ளந் தன்னில் உருப்பன மூன்றும்’, மணி 24:129-30. இவை முறையே காமம், சினம், மயக்கம் என்பன.
28. புற. 170:3.
29. புற. 213:15.
30. உ.வே.சா. உரையில்: பெரும். 445; குறி . 17; திரு .137. நச். உரையில்: கலி 94:42; 120:1 (அனந்தராமையர் பதிப்பு.)
பரிமேலழகர் உரையில் : குறள் 352 (மெய்யுணர்வு..
31. முந்தைய நூல் , ப.6
32. கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் வரலாறு,தொகுதி 1, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1970, ப. 109;
சிறுபாண். 103-7 அடிகளுக்குப் பெருமழைப்புலவர் இடும் உரையில், “மேலைநாட்டு முழுக்காட்சியாளராகிய இயேசுக்கிறித்து” என்ற தொடரை வரைந்துள்ளார். இவ்வீர் இடங்களையும் எனக்குச் சுட்டிய செ. கி. கல்லூரி, தமிழ்த்துறைப் பேராசிரியர் பாலுசாமி அவர் களுக்கு நன்றி; மேலும் காண்க: “The impact of Samkhya on Cankam Literature”, Philosophical Heritage of the Tamils. Madras: I. 1. T. S., 1983, p. 216; 5.5. शुणा னின் வள்ளுவரின் மெய்யியல், மணிவாசகர் பதிப்பகம், 1986, . 13.
33.ஒ .நோ:”இகலில் காட்சி”, திரு .166.
34. ஒ.நோ.”ஆசறு காட்சி”, திரு. 7.
35. ஞானப்பிரகாசர், முந்தைய நூல்,ப.64.
36. цр. 214:2.
37. फली. 24:129.
38. சந்திர வித்யபூஷண, முந்தைய நூல்,ப.6.



Leave a comment