திருச்செந்தாழையின் சிறுகதைகளில் பாத்திர வார்ப்பு

சித்ராதேவி ம.

முன்னுரை:
கதாபாத்திரவார்ப்பு என்பது கதையில் வரும் மாந்தர்களைப் படைப்பதைக் குறிக்கக்கூடியதாக அமைகிறது. கதைமாந்தர்கள் கதையில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை ஆய்வதே கதாபாத்திரவார்ப்பு எனலும் ஆகும். கதைமாந்தர் என்பது கதைக்கு மிக முக்கியமான கூறாகும். கதைமாந்தர்களின் செயல்கள், உரையாடல்கள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கொண்டே கதைக்கருவை வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். அவ்வகையில் க.பூரணச்சந்திரன் தன் கதையியல் நூலில் முன்வைக்கும் கதைமாந்தர்களுக்கான விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு திருச்செந்தாழையின் ‘விலாஸம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மூவகைக் கதைமாந்தர்கள்:
பூர்ணச்சந்திரன் கதைமாந்தர்களைப்பற்றி விளக்கும்போது
• முப்பரிமாணக் கதைமாந்தர் (சிற்பப் பாத்திரம்)
• இருபரிமாணக் கதைமாந்தர் (ஓவியப்பாத்திரம்)
• ஒரு பரிமாணக் கதைமாந்தர் (கோட்டுப்பாத்திரம்)
என்று மூன்று வகைக் கதைமாந்தர்கள் உள்ளன என்று குறிப்பிடுகின்றார். இந்த வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு திருச்செந்தாழையின் சிறுகதைகளில் வரும் கதைமாந்தர்களை வகைப்படுத்திக் காணலாம்.
திருச்செந்தாழை படைத்துள்ள முப்பரிமாணக் கதைமாந்தர்கள் :
முப்பரிமாணக் கதைமாந்தர் என்பது சிற்பப்பாத்திரம் ஆகும். அதாவது நீளம், அகலம். கணம் என்னும் மூன்று பரிணாமங்கள் இதற்கு இருக்கும். இந்தக் கதைமாந்தர்களை அறிந்து கொள்வது சிக்கலானதாகும்.
“முப்பரிமாணக் கதைமாந்தர்களின் குணாம்சங்கள் இன்னும் பன்முகத்தன்மை கொண்டவை. * (பூர்ணச்சந்திரன். 74)
என்பார் பூர்ணச்சந்திரன். இத்தகைய கதைமாந்தர்கள் தமது வாழ்க்கை அனுபவங்களால் வாசகர் மனதைத் தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலாஸம் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வார்க்கப்பட்டுள்ள முப்பரிமாணக் கதைமாந்தர்களை முதலில் காணலாம்.

முப்பரிமாணக் கதைமாந்தர்கள்
துலாத்தான் – பரமு:
துலாத்தான் என்னும் சிறுகதையில் வரும் பரமு எனும் கதைமாந்தர் சிற்பப் பாத்திரமாக அமைந்திருப்பதைக் காணலாம் பரமு துணை கதைமாந்தர் ஆகும். ஆனால் இந்த பாத்திரம் முப்பரிமாணம் கொண்டு அமைந்துள்ளது. பரமு என்பவள் இளம் வயது உடையவள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவளுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் இருமுறையும் கணவனோடு சேர்ந்து வாழாமல் தந்தை வீட்டில் இருக்கிறாள். அதற்குக் காரணம் அவளுக்கு மன வளர்ச்சி இல்லாததுதான் அதாவது வயதிற்கு ஏற்ற மனப்பக்குவம் அடையாதது தான் காரணம் திருமணம் செய்து வைத்திருந்தாலும் அந்த வயதை அடைந்திருந்தாலும் அவள் சிறு குழந்தைகளைப் போல நடந்து கொண்டிருக்கிறாள். கணவனோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை அவளால் வாழ முடியவில்லை.
“எந்நேரமும் விளையாட்டும் சக்கிலியக் கூத்தும்னா எப்புடி மாமா? பத்துபர்லாங்கு அலைஞ்சு வாரேன். இப்படிகிறுக்கச்சியாட்டமா பால்பவுடரைத் தின்னுகிட்டு உக்காந்திருந்தாவெனம் வருமா இல்லியா?” (பா. திருச்செந்தாழை, 77)
என்பதிலிருந்து அவளுடைய நிலையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அதோடு அவளுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் சில நொடியில் மறந்து வேறு நிகழ்வில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் அளவிற்கு அவளுடைய மனநிலை அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. சிறுபிள்ளைத்தனமாக துணியில் பொம்மை செய்து விளையாடுவது, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் இருப்பது, கணவன் தனது அருகில் வந்தால் பயந்து அலறுவது என அவளுடைய மனக்குறையை விளக்குகிறது.
ஆபரணம் — மரியம்:
ஆபரணம் என்னும் சிறுகதையில் வரும் கதைமாந்தர்களில் மரியம் என்னும் கதைமாந்தர் முப்பரிமாணக் கதைமாந்தராகும் இந்தக் கதைமாந்தர் மாறும் தன்மை உடைய கதைமாந்தர். அதாவது இந்த பெண் ஆரம்பத்தில் சுயநலமுடையவளாக இருக்கிறாள் ஆனால் இறுதியில் அந்த சுயநலமற்றவளாக காணப்படுகிறாள்.
மரியம் தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்ற எண்ணம் உடையவளாக இருக்கிறாள். நகை பணம் ஆகியவற்றின்மீது மோகம் கொண்டவர்களாக இருக்கிறாள் இவனுடைய இந்த பேராசையின் காரணமாக கணவனின் தம்பியிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொள்கிறாள். மரியத்திற்கு குழந்தைகள் இல்லை அந்த குறையை யாரும் அவளிடம் கூறி விடக்கூடாது என்பதால் தான் பணத்தின் மீது பேராசை உடையவளாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள் வெளியே பார்க்கும்போது இறக்கமற்றவளாக இருக்கிறாள் ஆனால் உள்ளுக்குள் துயரத்தின் உச்சநிலையில் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
“காளியப்பன் உட்பட எல்லோருமே அவளைப் பணப்பைத்தியம் என மனதிற்குள்ளோ வெளிப்படையாகவோ கூறியபோதெல்லாம் அந்தப் பைத்தியத்திற்குள் முகம் பொத்தியபடி அழுகின்ற ஒரு சிறுமியின் முகத்தையே திரவியம் உணர்வான். உண்மையில் அவளுக்கு மகிழ்ச்சி என்கிற ஒன்று இல்லவேயில்லை அதை யாரும் சொல்லிக் காட்டக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பணவெறி எக்காளம் எல்லாம்” (பா திருச்செந்தாழை 111)
மரியம் தன்னுடைய துயரங்களை மறைப்பதற்கான வழியாகத்தான் பணம் சம்பாதித்து சேர்த்து வைக்கிறாள். இந்தத் தன்மை சித்திரைக்கு குழந்தை பிறக்கும் வரைதான் ஒரு குடும்பத்தில் இரு மருமகள்களில் மூத்தவளுக்கு குழந்தைகள் இல்லை இளையவளுக்கு மூன்று குழந்தைகள் என்பதே ஒருவித துன்பத்தை ஏற்படுத்தும் அந்த துன்பத்தை மரியத்திடமும் காண முடியும் இதுவே அவளுடைய மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது.
கீறல்— வேலுமணி:
கீறல் என்னும் சிறுகதையில் முப்பரிமாணக் கதைமாந்தராக வருவது வேலுமணி என்னும் கதைமாந்தராகும் வேலுமணி கதையின் முதன்மைக் கதைமாந்தராகும். கதைசொல்லியின் அத்தை அதாவது கதைசொல்லியின் பக்கத்து வீட்டில் இருப்பவர் சிறுவயதிலிருந்தே அத்தை என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதற்காக காண முடிகிறது. வேலுமணி அதட்டல் திட்டல்களின் மூலம் தன் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறாள் அவள் திட்டினாலும் அதன்மூலம் அக்கறையையும் அன்பையும் காண்பிப்பவளாக இருக்கிறாள்.
“கண்டிப்பா முறைப்பமாக வாய் சொல்லும் போதே நடந்து போய் ஒரு செந்தில் உப்பு கரையையும் நீராகாரத்தையும் வேலு பண்டாரத்தின் கையில் திணித்து விடுவாள். ” (பா திருச்செந்தாழை, 210)
இவளிடம் இருக்கும் குறையாக மற்றவர்கள் கூறுவது இவளுக்கு குழந்தைகள் இல்லை என்பதாகும். இவள் எவ்வளவுதான் அன்பானவளாக இருந்தாலும் ஊரில் உள்ளவர்களுக்கு இந்தக் குறை தான் கண்ணுக்கு படுகிறது. எல்லா இடங்களிலும் தைரியமாக பேசத் தெரிந்த வேலுமணிக்கு இந்தக் குறையை வைத்து பேசும்போது அவள் பலவீனமானவளாக மாறிவிடுகிறாள். வேலுமணிக்கு குழந்தைகள் இல்லை என்றாலும் குழந்தைகளின் அன்பு செலுத்துபவளாகவும் குழந்தைகளைப் பராமரிக்கக்கூடியவளாகவும் இருப்பதைக் கதையில் இடம்பெறும் காட்சிகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.

திருச்செந்தாழை படைத்துள்ளஇருபரிமாணக் கதைமாந்தர்கள்:
இருபரிமாணக் கதைமாந்தர்கள் முப்பரிமாணக் கதைமாந்தர்களைப் போல சிக்கலானவையாக இரா. இந்தக் கதைமாந்தர்களை ஓவியப் பாத்திரங்கள் என்று பூரணச்சந்திரன் குறிப்பிடுகிறார்
இருபரிமாணக் கதைமாந்தர்களின் ஒரு சில பண்புகள் மட்டுமே விளக்கமாகும்”
(பூர்ணச்சந்திரன், 74)
என்று குறிப்பிடுகிறார். இருபரிமாணக் கதைமாந்தர்கள் வாழ்க்கை அனுபவங்களால் நம்மைத் தொடாது போனாலும்சிலமறக்க முடியாத தன்மைகளைக் கொண்டு அமைந்திருக்கும் எனலாம்.
விலாசம் என்னும் சிறுகதைத்தொகுப்பில் இருபரிமாணக்கதைமாந்தர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சில கதைமாந்தர்களைக் குறிப்பிடலாம்.
டீ-ஷர்ட்– பாரூக் :
டீஷர்ட் என்னும் கதையில் வரும் பாரூக் என்பவன் இருபரிமாணக் கதாபாத்திரத்திற்கு எடுத்துக்காட்டாகக்குறிப்பிடலாம். பாருக் என்பவன் காவல்துறையில் வேலை செய்பவனாக இருக்கிறான். கதையில் வரும் முதன்மைக் கதைமாந்தரான ஜே. பி என்பவனுடைய நண்பன்தான் பாரூக். ஜே. பிக்கு அவன் மனைவியை கண்டுபிடிக்க பாரூக் உதவியாக இருக்கிறான். இவனிடம் நிதானமும் ஆழ்ந்த அறிவும் இருப்பதை காண முடிகிறது.
“சீருடை அணியாமல் வந்திருந்தான்” (பா. திருச்செந்தாழை, 15)
என்பதிலிருந்து இவன் காவல்துறையில் வேலை செய்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவன் மிக தைரியமானவனாகவும் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மை உடையவனாகவும் இருக்கிறான்.
விலாஸம் – பொன் கொண்ட பெருமாள்:
பொன் கொண்ட பெருமாள் என்னும் கதைமாந்தர் வியாபாரத்தில் உச்சநிலையை அடைந்தவராக இருந்துள்ளார். இவர் கதையில் வரும் துணை கதைமாந்தர் ராமபவனம் என்று கூறினால் எல்லோருக்கும் தெரியும் என்ற அளவிற்கு இருந்தவர். இவர் மிகுந்த செல்வாக்கு உடையவர். இவரைப் பற்றி கூறும்போது
“நன்கு சேவ் செய்த முகம் கதர் இழை பனி எனும் தோளில் வெள்ளைத் துண்டுமாக பொன் கொண்ட பெருமாள் வந்தார் ஒரு காலத்தில் திட மேரி இப்போது கலிய துவங்கிவிட்ட செந்நிற சதைகள் தளர தொடங்கியிருந்தன நன்கு நரைத்திருந்த மயிர்களில் அழகான வாத்து மினுப்பு பிரகாசித்தது. கையில் பாதி படித்தபடி மடிக்க வைக்கப்பட்டிருந்த ஹிண்டு (பா திருச்செந்தாழை, 40)
இவர் மிகவும் வயதானவராக இருக்கிறார். கதையில் வரும் முதன்மைக் கதைமாந்தரான தன்ராஜ் தன்னிடம் வேலை செய்பவனாக இருந்து இப்போது தன்னைவிட உச்சத்தில் வளர்ந்து நிற்கிறான். இருப்பினும் அந்த நிலையை பார்த்து இவர் பொறாமை உணர்வு கொள்ளாதவராக இருக்கிறார். இப்போது ராமபவனம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் அதனால் எந்த வருத்தமும் கோபமும் கொள்ளாதவராக இருக்கிறார். வயதிற்க்குரிய மனபக்குவமும்அமைதியும் அன்பும் இவரிடம் காண முடிகிறது. கடந்தகாலத்தை நினைத்து கவலை இருந்தாலும்மனதில் வஞ்சனைஉடையவராகத் தெரியவில்லை.
நங்கவல்லி:
நங்கவல்லிஎன்னும் கதைமாந்தர் கல்யாணியின் மகளாகத் தெரிகிறது. இவளுக்கு பத்துவயதிற்குள் இருக்கக்கூடும். சிறுவயதிலேயே உடல்நிலை குன்றியவளாக தெரிகிறாள்.
“வீட்டிற்குள்ளிருந்து தனது எலும்பு துருத்திய உடலும் சோடாபுட்டி கண்ணாடியுமாக நங்கவல்லி வேலைக்கார ஆச்சியின் தோளைப் பற்றியவாறே வராண்டாவிற்கு வந்தாள். வளைந்துவிட்ட கால்கள் இரண்டும் விநோத எத்தனிப்புகளுடன் எட்டுவைத்தன நங்கவல்லி இன்னும் குளித்திருக்கவில்லை போல சோர்வான முகமும் பிசிறு பறக்கின்ற முன்சிகை நெற்றியுமாக பியட் காரின் கண்ணாடி ஜன்னலில் கையசைத்த கல்யாணியின் முகத்தைப் பார்த்து உயிரற்ற புன்னகையுடன் கையசைத்தாள்” (பா. திருச்செந்தாழை, 44)
இவளுடைய உடல்குறைபாட்டால் இவளுடைய தந்தை இவர்களை விட்டு சென்றுவிட்டார். நங்கவல்லிஇவ்வாறுஇருப்பதால்எல்லோரும்அவளைநன்றாகபார்த்துக்கொள்கின்றனர். அவளுக்குமற்றவர்களைமதிக்கவும்தெரிந்திருக்கிறது. எவ்வளவுபெரியஇடத்தில்இருந்தாலும்இவள்பண்பும்மரியாதையும்தெரிந்தவர்களாகஇருக்கிறாள்என்பதைஅறிந்துகொள்ளமுடிகிறது. சிறுவயதில்குழந்தைத்தனமுடையவளாகஇருந்தாலும்அவளிடம்ஒருவிதசோர்வுகாணப்படுகிறது. தன்னைஅந்தராமவிலாசத்திற்குள்ளேயேஒடுக்கிகொள்பவர்களாகஇருக்கிறாள்.
துடி-ஜனதா வாத்தியார்:
ஜனதா வாத்தியார் கதையில் வரும் சிறுகதைமாந்தராகும். இருப்பினும் இந்தப் பாத்திரம் இருபரிமாணப் பாத்திரமாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இவர் ஆசிரியராக பணிபுரிந்தவராக தெரிகிறது.
“ஜனதா வாத்தியார் ஒற்றைக் கையுடன் சைக்கிளில் வந்து இரங்கும்போது சாயங்காலம் கவிழத்துவங்கியிருந்தது. அவரது வெறுமையான இடதுகை சட்டைத்துணி வெம்மையான இளங்காற்றில் ஆடிக்கொண்டிருந்தது” (பா திருச்செந்தாழை, 58)
இதிலிருந்து இவருக்கு இடதுகையில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இளம் வயதில் இன்னாசியைப் போல கோபமுடைவராக இருந்திருக்கக்கூடும். இவரும் பலருடன் சண்டைபோடுபவராகவும் அதனால் இவருடைய கையை இழந்தவராகவும் தெரிகிறது. அதன் பிறகு அவருடைய கோபத்தை விட்டு அமைதியாக வாழ்கிறார் என்பது தெரிகிறது. இவர் செய்த தவறு இன்னாசியும் செய்து விடக்கூடாது என்பதற்காக இன்னாசியை கண்டிக்கிறார்.
த்வந்தம்-சிங்கிக்காரன்:
த்வந்தம் என்னும் சிறுகதையில் வரும்சிங்கிக்காரன் முதன்மைக் கதைமாந்தர் ஆகும். வியாபாரநுட்பங்களை நன்றாக அறிந்தவனாக இருக்கிறான். பல இடங்களுக்குஅலைந்து திரிந்துவாழ்பவனாக இருக்கிறான். நடுத்தர வயது உடையவன் இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவன் தீபனுடைய மண்டையில் கொள்முதலுக்கு உதவியாக இருக்கிறான். இவனால் நஷ்டத்திலிருந்த வண்டி மீண்டது. இவனிடம் ஆழந்து உற்று நோக்கக்கூடிய தன்மை காணப்படுகிறது. எல்லா இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களைச் சேகரித்து அதிலிருந்து வியாபாரம் நுணுக்கங்களை அறிந்து கொள்கிறான். பல உத்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர உதவி செய்கிறான். தீபனுடைய மனைவியின் மீது இவனுக்கு ஒருவிதஈர்ப்பு ஏற்படுகிறது. பொதுவாகஇவன் நல்லவளாக இருக்கிறான் ஆனாலும் இந்த உணர்வு அவனிடம் எழவே செய்கிறது.
“ஒரு சிங்கிகாரனாக எந்த இடத்திலும் வெகுவேகமாக அங்கிருக்கும் பழைய பொருட்களுக்குள் ஒன்றாகி ஒன்றாக உருமாகி விடுகின்ற தைைம எனக்குக் கை கொடுத்தது. “(பா. திருச்செந்தாழை, 64)
வெகு சீக்கிரம் ஒரு இடத்திற்கு பழகிக் கொள்பவனாக இருக்கிறான். வண்டியில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம்நான்தான் என்னும் பெருமிதத்தில் லீலாவின் மீது ஆசை படுகின்றான். சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் இயங்கக்கூடியவனாக இருக்கிறான். இந்தக் கதைமாந்தர் மாறும்தன்மை உடையது. அதாவது ஆரம்பத்தில் லீலாவின் மீது ஆசைப்படுவனாகஇருக்கிறான். இறுதியில் அந்த ஆசை தவறானது என்பதைப் புரிந்துகொவளிடம் இருந்து விலகிச் செல்கிறான்.
துலாத்தான்-அய்யாவு:
‘துலாத்தான்’ என்னும் சிறுகதையில் வரும் அய்யாவுஇருபரிமாணகதைமாந்தர்ஆகும். வயதானவர். இவர்தரகுவேலைசெய்பவராகஇருக்கிறார். இவருக்குஅந்ததொழில்செய்வதில்எந்தலாபமும்இல்லைஎன்றுதெரிந்தும்அதைசெய்கிறார். அவர்அந்ததொழிலைவிருப்பமுடனேசெய்கிறார். இந்ததொழிலைதவிரவேறுஎந்ததொழிலும்தெரியாதவராகஇருக்கிறார். தன்னுடையமகள்மீதுமிகவும்பாசமுடையவராகஇருக்கிறார். பரமுனுடையநிலையைஅறிந்திருந்தாலும்அவர்அவளைஎந்தஇடத்தில்விட்டுக் கொடுக்காதவராக இருக்கிறார். பரமுவின்மனநலம்குன்றியதால்அவளுடையதிருமணவாழ்க்கைதடைப்பட்டுவருகிறதுஇதைநினைத்துஅவர்வருந்துபவராகஒருவிதகுழப்பஉணர்வுஉடையவராகவும்இருக்கிறார். அவளுடையஎதிர்காலத்தின்மீதுஅச்சம்ஏற்பட்டுஅவளுக்காகஅவளுடையகணவனிடம்கெஞ்சுபவராகஇருக்கிறார்அவருக்குதான்செய்யும்தொழில்மீதுமதிப்புமரியாதையும் உள்ளது. அதற்காகஅவருக்குநஷ்டம்ஏற்பட்டாலும்அதைபொருட்படுத்திக்கொள்வதுமில்லை.
அசபு-வாசுதேவன்:
வாசுதேவன் என்னும் கதாபாத்திரமும்இருபரிமாணக்கதைமாந்தர் ஆகும். இவன் நடுத்தர வயதுடையவன். இவனுக்கு திருமணம் முடிந்து விட்டது. இவனைப் பற்றி கூறும் போது,
“வாசுதேவனுக்கு அப்படி ஒரு ஐஸ்வர்யம் இருந்தது அவன் பிறந்ததிலிருந்தே சீரழிவின் பார்வையாளனாக இருந்து வந்துள்ளான். ” (பா. திருச்செந்தாழை, 101)
இவனுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இப்போது அதை விடுத்து வேறு தொழில் செய்து வருகிறான். மிகுந்த கோப குணம் உடையவனாக இருக்கிறான். யார் மீதும் அக்கறை இல்லாதவனாக ஒரு வஞ்சகம் உணர்வு உடையவனாக இருக்கிறான். டூமன் என்னும் கதாபாத்திரத்தின் மீது எப்போதும் ஒருவித வெறுப்பும் அவனைப் பார்க்கும்போது கடுகடுப்புமாக இருக்கிறான். பிடிக்காமல் போவதற்கான காரணம் அவருடைய உடல் குறைபாடு என்பதை கதையின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. வாசுதேவன் வறுமையின் விழும்பில் இருப்பதை கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டியவன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாகமாறி இருப்பதை காண முடிகிறது.
ஆபரணம்-சித்திரை:
ஆபரணம் என்னும் சிறுகதையில் வரும் சித்திரை இருபரிமாணக் கதைமாந்தராகும். இந்தக் கதைமாந்தர் முதன்மைக் கதைமாந்தர். எளிதில் எல்லோரையும் நம்பி ஏமாந்து விடுபவளாக இந்தக் கதைமாந்தர் அமைக்கப்பட்டுள்ளது.
“வீட்டிலிருந்து தள்ளியிருக்கும் பழைய கோவிலுக்குத் தினசரி விளக்கேற்றப் போய்வருவதற்குள் பூக்காரியிடமும் பிச்சைக்காரர்களிடமும் அவள் ஏமாந்து திரும்புகின்ற ஒவ்வொரு முறையும் திலகரால் அவள் நோகடிக்கப்படுவாள். ஒரு பெண்ணின்மீது அந்தக் கேலிகள் ஏற்படுத்துகின்ற அழகான வெகுளித்தன அழுகைகளை, அந்த அழுகைக்குப் பிறகு அவள் மேலும் சிறுமியாக யவ்வனம் கொள்வதை மரியம் பார்த்துக்கொண்டேயிருப்பாள். மிக வெகுமதியான திலகரின் பாராட்டுகளைவிட அப்போது தன்னிடம் இல்லாமலாகிவிட்ட ஏதோவொன்றை அவளது உள்ளம் தேடிக்கொண்டே இருக்கும். ” (பா. திருச்செந்தாழை. 120)
வெகுளித்தனம் மிக்கவளாக சித்தரை காணப்படுகிறாள். சித்தரையிடம் எப்போதும் குழந்தை தன்மை இருக்கும். எல்லோரையும் அனுசரிக்க கூடிய தன்மை உடையவளாக இருக்கிறாள். நகை ஆபரணங்களை மரியம் இவளிடமிருந்து ஏமாற்றி பறித்துக் கொண்டாலும் அதை அவள் பொருட்படுத்தியது இல்லை. மனதிற்குள் எவ்வித பொறாமை உணர்வும் இவளிடம் இல்லை. எவ்வளவு துன்பமான சூழல் வந்தாலும் அதிலிருந்து வெளிவந்து மகிழ்ச்சியை உருவாக்க அவளுக்கு தெரிந்திருக்கிறது.
வேர்-அப்பா:
அப்பா என்னும் கதைமாந்தர் மிகவும் அமைதியானவராக இருக்கிறார். இவர் யாருடனும் அதிகம் பேசாதவராக தெரிகிறது. அரசாங்க வேலைக்கு செல்பவர் எந்த கேலி கிண்டல்களிலும் கலந்து கொள்ள தெரியாதவராக கதைமாந்தர் அமைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது. அந்த உறவிலிருந்து வெளிவர தெரியாதாவராக அந்தப் பெண்ணின் மீது ஆழ்ந்த அன்பு இருக்கக்கூடியவராக காணப்படுகிறது. அந்தப் பெண் நோயாளியாக இருந்த போதும் அவளை அன்பாக பார்த்துக் கொள்பவராக இருக்கிறார். அவளுடனான இந்த உறவை பற்றி யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு சேவை செய்யக்கூடிய தன்மை காணப்படுகிறது. இவருக்கு மகன் மனைவி என உறவுகள் இருந்தும் இந்த செயல் இவரை எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆள்படுத்தவில்லை. அதேபோல் அந்த குடும்பத்தின் மீது அவர் வெறுப்பை காண்பிக்காமல் அன்பாக இருக்கிறார்.
“அப்பாவிற்கு ஊருக்குள் ஊமத்துரை என செல்ல பெயர். அங்கேயே பிறந்து வளர்ந்து இருந்தாலும் ஒருவருடனும் சகஜமாக பேச தெரியாத மனிதர். வேலை முடிந்து வந்த மாலையில் அவருக்கு செய்வதற்கு எதுவுமே இருக்காது. வாசலில் அமர்ந்து காலையில் வாசித்த தினசரியில் திரும்பவும் வரி விளம்பரம் விடாமல் படித்துக் கொண்டிருப்பார். அம்மா எனக்கு மட்டும் கேட்கும்படி ‘அடைகோழி’ என இனிது சலித்துக் கொள்வாள். அப்பா பெரும்பாலும் இதுபோன்ற கேள்விகளில் கூட கலந்து கொள்வது இல்லை” (பா. திருச்செந்தாழை, 153)
எப்போதும் அமைதியாக இருக்கும் தன்மை இதிலிருந்து காணப்படுகிறது. ஊரில் இருக்கக்கூடிய மக்களுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்தாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கக்கூடிய தன்மை இக்கதாபாத்திரத்திடம் காணப்படுகிறது.
தேவைகள்-சிவசுஅய்யா:
‘தேவைகள்’ என்னும் சிறுகதையில் வரும் சிவசு அய்யா முதன்மைக் கதைமாந்தர் ஆகும். இவர் வயதானவர் என்பது இக்கதையின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எல்லோர் மீதும் சட்டென கோபம் கொள்ளக்கூடிய தன்மை இவரிடம் காணப்படுகிறது. வறுமையில் இருந்தாலும் கௌரவமாக வாழ்ந்து வந்தவராக தெரிகிறது. இவருடைய மனைவி இறந்து விட்டதாக தெரிகிறது. அதோடு இவருடைய மகனும் சிறுவயதிலேயே இறந்து விட்டதால் குடும்பச் சுமை முழுவதும் இவருடைய தலையின் வந்து விழுந்துவிடுகிறது. அதனால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடுகிறது. இவருடைய தோட்டங்களைப் பார்த்துக் கொள்ள ஒரு நபரை உதவிக்கு வைத்துக் கொள்கிறார். ஆனால் அவன் மீது அவ்வளவாக நம்பிக்கை கிடையாது.
“ இந்தச் சங்கரன் பையன் செத்தும் அழ வெச்சான். . . இப்ப வயசுப் பெண்டாட்டிய தனியா காவக் காக்கவெச்சும் பதறவைக்கானே! காலம் அப்பிடிக் கெடக்கு. ” (பா. திருச்செந்தாழை, 186)
இவர் தனிமையாகவே இருக்கிறார் பல மன வருத்தங்களைக் கொண்டவராக எல்லோர் மீதும் கோபம் உடையவராக இருக்கிறார் இந்தக் கதைமாந்தர் மாறும் தன்மை உடையது. அதாவது கதையின் தொடக்கத்தில் முத்துவின் மீது கோபமும், அவனை ஏற்றுக் கொள்ளாமல் தவறாக நினைத்து திட்டவும் செய்வதை காண முடியும். ஆனால் பிறகு அவனுடைய மனதை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக் கொள்வதும் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.
படையல்-கடற்கரை:
‘படையல்’ என்னும் சிறுகதையில் வரும் கடற்கரை எனும் கதைமாந்தர் இருபரிமாணக் கதைமாந்தர். இந்தக் கதைமாந்தர் கதையின் முதன்மைக் கதைமாந்தர் ஆகும். இவருக்கு ஐம்பது வயது ஆகியும் நிரந்தரமான வேலை கிடையாது. அதனால் இவருக்கு வீட்டில் எவ்வித மரியாதையும் இல்லாமல் பெயரளவு மட்டுமே இருக்கின்றார். ஆரம்பத்தில் பலவிதமான தொழில்கள் செய்து அதில் ஒன்று கூட திருப்தியை அளிக்காமல் இப்போது வீட்டோடு இருப்பதை காணப்படுகிறது. தன்னுடைய அன்றாட தேவைகளுக்கு கூட மனைவியிடம் பணம் கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
“ இதையெல்லாம் வெறுமனே கேட்டுக் கொண்டிருக்க மட்டும் முடிந்தது கடற்கரையால். இதற்கு முன்னால் பல தருணங்களில் இயல்பாகவே அவரிடமிருந்து கிளம்பிய கோபங்களை, மேரி தன்னுடைய குத்தல் பேச்சின் வழி முனை முறித்தெறிய, போகப்போக கடற்கரையின் இருப்பும், பேச்சுக்களும் பெயரளவில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. பீடிக்கட்டு வாங்குவதற்கே மேரியின் சுருக்குப்பை திறக்கப்படும் வரை பொறுமை காக்க வேண்டியதிருந்தது. ” (பா. திருச்செந்தாழை, 194)
மிக அமைதியாகவும் யாருடனும் அதிகம் பேசாதவராகவும் இருக்கிறார். தன்னுடையகருத்துகளைவீட்டில்கூறுவதற்குகூடதைரியம்இல்லாதவராகஇருக்கிறார்.
கீறல்-கதைசொல்லி:
கீறல்’ என்னும் கதையில் வரும் கதைசொல்லி சிறு வயது உடையவன். அவனுக்கு வேலுமணி அத்தையை மிகவும் பிடித்திருக்கிறது. என்னதான் கோவக்காரியாக இருந்தாலும் அவளுக்கு கதைசொல்லியின் மீது தனி பாசம் உண்டு. இவனுக்கு அத்தை மட்டும் தான் பிடிக்கும். அதனால் வேறு யாருடனும் அதிகம் பேசாதவனாகவும் இருக்கிறான். இவன் சிறுவயது இருக்கும் போதே இவளிடமிருந்து வளர்ந்தவனாக தெரிகிறது. இவள்சொந்தத்தால் அத்தையாகமல் பக்கத்துவீட்டில் இருப்பதால் அத்தை ஆனவள். இவனுக்கு அத்தை மீது அவள் செய்யும் செயல்கள் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. அவளுடைய அழகை வர்ணிப்பவனாக தெரிகிறான். அவளுடன் இருக்கும்போது கதைசொல்லி மிகுந்த பாதுகாப்பு உடையவனாகநினைத்துக்கொள்கிறான். அத்தையால் மட்டுமே இந்த உலகத்தில் தன்னைக் காக்க முடியும் என்பது கதை சொல்லியின் மனதிற்குள் ஆழமாக பதிந்திருப்பதை காண முடியும்.
நாச்சி:
நாச்சி என்னும் கதைமாந்தர் கோபமுடையவளாக இருக்கிறாள். வேலுமணியின் மீது வெறுப்புணர்வு கொண்டவளாகவும் தெரிகிறது. அதற்காக அவளைத் திட்டவும் அவளுடைய குறைகளைக் கூறுபவளாகவும் இருக்கிறாள். வேலுமணியைக் காயப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் உடையவளாகத் தெரிகிறது. நாச்சிக்கு வேலுமணி மீது பொறாமை இருப்பதைக் காண முடிகிறது. நாச்சி கதைசொல்லியின் குடும்பத்தைச் சார்ந்தவள். ஆனால் வேலுமணி உறவினர் கிடையாது. ஆனாலும் நாச்சியை விட வேலுமணியை எல்லோருக்கும் பிடிக்கிறது என்ற காரணத்தால் நாச்சிக்கு வேலுமணி மீது வெறுப்பு ஏற்படுகிறது. அதனால் அவளுடைய குறைகளைக் கூறி அவளைக் காயப்படுத்த முயற்சி செய்கிறாள் என்பதை குறிப்புகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
திருச்செந்தாழை படைத்துள்ள ஒருபரிமாணக் கதைமாந்தர்கள்:
ஒருபரிமாணக் கதைமாந்தரை கோட்டுப் பாத்திரம் என்றும் குறிப்பிடுகிறார் பூரணச்சந்திரன். இத்தகைய கதைமாந்தர்களை எல்லாக் கதைகளிலும் எளிதில் பொருந்தி விட முடியும். இந்தக் கதைமாந்தர்களைப் படைக்க எந்தக் கற்பனையும் தேவையில்லை.
“ஒருபரிணாமக் கதைமாந்தர்களும் உண்டு அவர்களுக்கு ஸ்டாக் கேரக்டர் என்று பெயர் எப்போதும் ஒரே மாதிரி இயங்குபவர்கள். ” (பூர்ணச்சந்திரன், 74)
இந்தக் கதைமாந்தர்ளை உருவாக்க வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் தன்மை தேவையில்லை. இந்தக் கதைமாந்தர்ளைப் பற்றி அதிக தகவல் கிடைக்க வாய்ப்பில்லை.
‘விலாஸம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிலும் இம்மாதிரியான கதைமாந்தர்கள் இடம் பெறவதை காண முடிகிறது.
டீ-ஷர்ட்:
‘டீ-ஷர்ட்’ என்னும் கதையில் வரும் தங்கவேலு கோட்டு பாத்திரம் ஆகும். இவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆக இருக்கிறார். இவரை விட உயர்ந்த இடத்தில் பாரூக் இருக்கிறார். எனவே அவன் சொல்லும் வேலைகளை இவர் செய்யக்கூடியவராக தெரிகிறார்.
“தங்கவேலுவின் கை தன்னிச்சையாக பின்பக்க பெல்ட்டில் சொருகி வைக்கப்பட்ட வாக்கி-டாக்கியின் பட்டனை ஆன் செய்தது. . . தங்கவேலு அசாத்திய உரிமையோடு அவனது சட்டை பாக்கெட்டுக்குள் கை நுழைத்து செல்போனை எடுத்துக் கொண்டார். ” (பா. திருச்செந்தாழை, 13)
நம்பகமான நபராக இருக்கிறார். இவர்மேல் அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் காரியங்களுக்குத் துணையாக இருக்கிறார். இதைத் தவிர வேறு எந்த செய்தியையும் கதையில் குறிப்பிடவில்லை.
துடி:
‘துடி’ என்னும் கதையில் வரும் சம்பா என்னும் கதாபாத்திரமும் இத்தன்மையுடையது ஆகும். அவள் இன்னாசியின் மனைவி, அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவளுக்கு காது கேட்காது என்பதை கதையில் வரும் குறிப்புகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
செவிட்டுச் சிறுக்கி. . . . நொறுக்கிக் கொன்னுருவேன் எல்லாத்தையும்” (பா. திருச்செந்தாழை, 56)
இவ்வாறு கூறுவதன் மூலம் அவளுக்கு காது கேட்பதில்லை என்னும் குறைபாடு உடையவளாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவள் கணவனை எதிர்த்துப்பேசாமல் பொறுமையாக இருக்கிறாள். அவன் இவளைத் துன்புறுத்தினாலும் அதைத் தாங்கிக்கொள்பவளாக இருக்கிறாள்.
விலாஸம்:
விலாஸம் என்னும் சிறுகதையில் வரும் அய்யாவு என்னும் கதைமாந்தர் தன்ராஜ் என்பவனுடன் பல காலமாக மண்டியில் வேலை செய்பவராக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. .
“தலையில் முண்டாசும் வெற்றிலை வாயுமாக அய்யாவு அந்த புத்தகத்தை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் . அப்பாவின் நீண்ட கால விசுவாச சிப்பந்திகளில் முதன்மையான வயசாளி. ” (பா. திருச்செந்தாழை, 47)
இவர் அவ்வளவாகப் படித்திருக்கவில்லை மண்டியில் வேலை செய்து அதில் அனைத்தும் கற்றிருந்தார்.
தேவைகள்:
‘தேவைகள்’ எனும் சிறுகதையில் வரும் சமுத்திரம் ஒருபரிமாணக் கதைமாந்தர் ஆகும். சமுத்திரம் பணக்காரனாக இருந்தும் சிவசு அய்யாவிற்கு எந்த உதவியும் செய்யாமல் அவரை கேலி செய்பவனாக இருக்கிறான். இவன் சிவசு அய்யா பெரிய ஐயா என்று அழைப்பது மூலம் உறவினராக இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கதைமாந்தர் கௌரதை பிடித்த கதைமாந்தராக அமைக்கப்பட்டுள்ளது. அவருடைய வறுமையை சமுத்திரம் கேலிசெய்பவனாக இருக்கிறான்.
நிழல் இழந்த முற்றம்:
‘நிழல் இழந்த முற்றம்’ எனும் சிறுகதையில் வரும் வரது பெரியப்பா கோட்டு பாத்திரம் ஆகும். ஒரு விசேஷ வீட்டில் முன் நின்று நகர்த்தக்கூடிய, அந்த கூட்டங்களை அதட்டி அடக்கக்கூடிய ஒருவராக இந்தக் கதைமாந்தர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைமாந்தர் கோட்டுப் பாத்திரமாக அமைந்திருந்தாலும் கதையின் முக்கிய திருப்பத்திற்கு இப்பாத்திரம் உதவுகிறது.
இவர்களைத் தவிர வேறு சில கதைமாந்தர்களும் கோட்டுப் பாத்திரங்களாக அமைந்திருப்பதைக் காண முடியும். கதையில் அதிகமாக இடம்பெறவில்லை என்றாலும் கதையின் சில திருப்பங்களை எடுத்துக் கூறுபவர்களாக இருக்கின்றனர். இவர்களைப் பற்றி வேறு எந்த வருணனையும் கதையில் இடம் பெறுவதைக் காண முடியாது.
முடிவுரை:
திருச்செந்தாழையின் விலாஸம் என்னும் சிறுகதைத் தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகளில் முப்பரிமாணக் கதைமாந்தர்களும் இருபரிமாணக் கதைமாந்தர்களும் ஒருபரிமாணக் கதைமாந்தர்களும் இடம்பெறுவதை காண முடியும். சிறுகதையின் முதன்மைப் பாத்திரங்கள் இருபரிமாணத் தன்மையை உடையவையாக இருந்தால் போதுமானது என்பது பூர்ணச்சந்திரன் குறிப்பிடுகிறார். அந்தவகையில் திருச்செந்தாழையின் கதைகளில் முதன்மைக் கதைமாந்தர் மட்டுமல்லாமல் சிறுகதைமாந்தர்களும் இருபரிணாமக் கதைமாந்தர்களாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதது. திருச்செந்தாழை கதைமாந்தர்களைத் படைத்துக்காட்டுவதில் திறன்மிகுந்தவராக விளங்குகிறார் எனலாம்.

Leave a comment

Trending