பதிவு

விதை 32ஆம் நடவு –
பகல் இரவுகளைக் கொண்டு வருகிற பறவையும் വിബ്ജിയോരും

அகமது கனி

➢ பாலக்காடு இலக்கியச் சோலையின் விதை – நடவு-32 கடந்த 13.9.2025 சனி அன்று தத்தமங்கலம் கவின்மணிச்சுடர் இல்லத்தில் நடந்தேறியது.
➢ நடவு, காலை 9.30 மணிக்கு அகமது கனி தலைமையில் தொடங்கியது.
➢ சிறப்பு விருந்தினர்களாக – தமிழ் எழுத்தாளரும் தாந்த்ரிக ஓவியருமான பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. ஷாராஜ் மற்றும் பாலக்காடு அரசினர் மோயன் மாதிரி மகளிர் மேனிலைப் பள்ளி உயிரியல் ஆசிரியரும் மலையாளக் கவிஞருமான திருமதி. பிந்து பிரதாப் – ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
➢ நிகழ்வில் முதலாவதாக, அகமது கனி விருந்தினர்களையும் பிற பங்கேற்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
➢ பின்னர் ”யான் பெற்ற இன்பம்” தலைப்பில்……………… தமிழ்மொழித் தரப்பில் — இரா.கீர்த்தி, பாவனா சு., பாவனா ப., இ. ஜானகிப்ரியா ஆகியோரும்… மலையாளமொழித் தரப்பில் — கமலபாலா அவர்களும் தாங்கள் படித்த கதைகள்-கவிதைகள் மற்றும் காட்சியனுபவம் குறித்த தம் அனுபவங்களைப் – எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
➢ அடுத்து, “பனுவல் நயம்” அமர்வில்……. ஷாராஜ் அவர்களின் “பகல் இரவுகளைக் கொண்டுவரும் பறவை” தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு ……. இவ் அமர்வில், பாலசந்திரன் புதுவயல், ஜோதிலட்சுமி, ஆசிஃபா, பாவனா ப., பாவனா சு., இரா.கீர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், பிந்து பிரதாப் அவர்களின் “விப்ஜியார்” மலையாள கவிதைத் தொகுப்பு …… இவ் அமர்வில், பிரேமதாஸ், இரஞ்சினி, சீமா ராஜ்சங்கர், சிவதாசன் மடத்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
➢ முடிவில்,
—- ”பகல் இரவுகளைக் கொண்டுவரும் பறவை” நூலாசிரியர் ஷாராஜ் அவர்கள், தம் ஏற்புரையில், நூலிலுள்ள சிறுகதைகளை தம் வாழ்வனுபவங்களிலிருந்து சற்று கற்பனை சேர்த்து உள்ளது உள்ளபடியே தந்திருப்பதாகவும் தாம் ஓர் இலக்கியவாதி என்பதால் நிகழ்ந்தவற்றையே விவரித்ததாகவும் அதனைத் தாண்டி அப்படைப்புகளில் எவ்வித அறிவுரைத் தொனியையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
—- மலையாள எழுத்தாளர் பிந்து பிரதாப் தம் ஏற்புரையில், தம் புறச்சூழல் மற்றும் மனச்சூழல் சார்ந்து கவிதைகள் மலர்ந்த விதத்தை பகிர்ந்துகொண்டார். அவரது உரை ஒரு தேர்ந்த சொற்பொழிவாளரைப் போல் கம்பீரமாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.
➢ பாவனா சு. தலைமையில் நிகழ்ந்த “கவிப்பட்டறை”யில் போட்டியாளர்கள் இரா.கீர்த்தி, ஆசிஃபா அ., பாவனா சு., பாவனா ப., ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
➢ கோரிக்கைக்கு இணங்க மாணவர். லிவ்யா, இர. திருப்பதி ஆகியோர் தம் இனிய குரலால் ஆளுக்கொரு பாடலைப் பாடி கூட்டத்தினரை மகிழ்வித்தனர்.
➢ நிறைவாக, சிறப்பு விருந்தினர்கள், கவிப்பட்டறை வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
➢ இந்த விதை-நடவில் மேலே குறிப்பிடப்பட்டோர் தவிர கௌதமன் ஐயா, பௌஸ்டீனா ம., வின்சி மு., சி.அஞ்சலி, நா.கமலி, ஷாஜியா அ., மு.ஆரியநந்தா, ஜெயக்குமார் வீ., குணசேகர் ம., இவ்வா சேஸின், புஷ்பா பாலசந்திரன், சசிகுமார், மு., உம்முல் பர்கத், லாவண்யா மு. ஆகியோரும் கலந்துகொண்டனர்.
➢ கவிதா மணாளன், இ.ஜானகிபிரியா இணையரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ் “விதை” நடவு, இறுதியில் பாவனா சு. நன்றி நவில இனிது நிறைவுற்றது .

படத்தில் இடம்பெற்றிருப்போர்
கீழே அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக வின்சி, பௌஸ்டினா,அஞ்சலி, ஆசிபா, இவ்வா சேஷின், ஜோதிலட்சுமி
நாற்காலியில் : சிவதாசன் மடத்தில், சீமாராஜ்சங்கர், பிந்து, ஷாராஜ், பாலச்சந்திரன் புதுவயல், புஷ்பா பாலச்சந்திரன், ஜானகிபிரியா
நிற்போர்: லிவ்யா, ஆர்யாநந்தா, லாவண்யா, உம்முல் பர்கத், கமலி, ரஞ்சினி, இரா.கீர்த்தி, சு.பாவனா, ஷாஜியா, ப.பாவனா, அகமது கனி, கவிதா மணாளன், சசிக்குமார், பிரேம்தாஸ், கமலபாலா விஜயன், குணசேகரன், ஜெயக்குமார்

படம் உதவி : ரஞ்சினி கந்தசாமி

Leave a comment

Trending