பீட்டர் கவிதைகள்
பீட்டர் பால்

கவிதை 1
கொஞ்சம் விறகு எடு
அதிகமாய்
எண்ணெய் ஊற்று
தீக்கனல் கொண்டு வா
பற்ற வை.
தீ கொழுந்து விட்டு எரிகிறதா..?
தாமதம் வேண்டாம்
உன் சாதியை வீசி எறி.
கவிதை 2
வெட்டப்பட்ட ரூவா நோட்டுகள்
தவழ்ந்து விளையாடும் குழந்தை
கம்பெடுக்கும் தாய்
வாரியணைக்கும் தந்தை
பூமிக்கு வந்த கடவுள் !
கவிதை 3
இறந்த தந்தையின் பாதத்தில்
வரையப்பட்ட ஓவியமாக
ஆயிரத்தியெட்டுப் பிளவுகள்.

Leave a reply to அகமது கனி Cancel reply