மழை – கவிதைகள் இரண்டு

மு. ஶ்ரீதர்


**1**
திடீரென்று வந்து
‘அப்பா இன்னைக்கு மழை வருமா’
என்பான்
என் குழந்தை.

சின்ன புன்முறுவலோடு
‘அவனுக்குப் பிடித்த மழை வரும்’
என்பேன்…

வரப்போகும் மழையில்
மெல்ல…
நனையத் தொடங்குவான்!

அவன் மழைக்குள்
என் குடையை
ஒருபோதும் விரிப்பதில்லை…


**2**

வாசலில் தேங்கிய
மழைநீரை…
என்ன செய்தும்
வெளியேற்ற முடியவில்லை…
ஒரே ஒரு
கப்பல் செய்து
அதைக் கடலாக்கியது
குழந்தை…!


One response to “மழை – கவிதைகள் இரண்டு”

  1. அகமது கனி Avatar
    அகமது கனி

    இரண்டாம் கவிதை அருமை! என் குழந்தைப் பருவம் நோக்கி உள்ளம் சென்றுவிட்டது.. மீள்வதற்கு பல நிமிடங்கள் ஆகிவிட்டன.

    மழை வந்தால் இப்போதும் (வெட்கத்தை விட்டு) கப்பல்விட ஆசைதான். ஆனால், குண்டும் குழியுமான வீதியை நிரவி கான்கிரீட் தளம் போட்டுவிட்டார்களே…

    Like

Leave a reply to அகமது கனி Cancel reply

Trending